ஆப்நகரம்

பிக் பாஸ் வீட்டில் இனிப்பு, போட்டிகள், ஆட்டம் என களைகட்டிய நவராத்திரி கொண்டாட்டம்

பிக் பாஸ் வீட்டில் இன்று விஜயதசமியை முன்னிட்டு 4 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கிராமம் மற்றும் நகர வாசிகளாக மாறி விஜயதசமியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Samayam Tamil 26 Oct 2020, 9:31 pm
Samayam Tamil bigg boss
இன்றைய எபிசோடின் தொடக்கமாக எவிக்ஷன் பிராசஸ் நடந்தது. வேல்முருகன், ஆஜித், சுரேஷ், ரம்யா, சனம், நிஷா மற்றும் பாலாஜி நாமினேட் செய்யப்பட்டனர். நாமினேஷன் முடிந்த பிறகும் ஹவுஸ்மேட்ஸ் இடையே அதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டு தான் இருந்தது.

அதையடுத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விஜயதசமி நாளுக்காக வீடு முழுவதும் பூ மற்றும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். வீட்டின் வாசலில் வாழை மரங்களை வரவேற்கும் விதமாக கட்டியிருந்தனர். அதை பார்க்கும் பொழுது வீட்டுடன் சேர்ந்து போட்டியாளர்களும் மிக அழகாக ஜொலித்தனர்.

இன்று நாள் முழுவதும் அவரவர் அணியினருடன் சேர்ந்து ஒவ்வொரு போட்டியையும் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்றும் அதில் நடக்க இருக்கும் எல்லா நிகழ்வுகளையும், போட்டிகளையும் அனிதா தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்குவார் என பிக் பாஸ் கூறினார். அனிதா கதாபாத்திரமாகவே மாறி சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணி கிராம வாசிகளாகவும், மற்றொரு அணி நகரவாசிகளாகவும் இருந்தனர். கிராம வாசிகளாக சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ச்சனா, ஆரி, வேல்முருகன், கேப்ரில்லா, சம்யுக்தா, நிஷா, ரியோ ஆகியோரும் நகர வாசிகளாக சனம், பாலாஜி, சோம், ஷிவானி, ரம்யா, ரமேஷ் ஆகியோரும் இருந்தனர்.

கிராம வாசியாகவே மாறிய சுரேஷின் உரையாடலை கேட்க நன்றாகத் தான் இருந்தது. அதில் அர்ச்சனா மற்றும் நிஷாவும் சேர்ந்து கொண்டனர்.

கிராம வாசிகளுக்கும், நகர வாசிகளுக்கும் இடையே சமையல் போட்டி நடைபெற்றது. அதில் நகரவாசிகள் அணியில் இருந்து பாலாஜி மற்றும் சனம் பங்கேற்றனர். கிராமவாசிகள் அணியில் இருருந்து சுரேஷ் மற்றும் அர்ச்சனா பங்கேற்றனர்.

ஒவ்வொரு அணியில் இருந்தும் இரண்டு பேர் அவரவருக்குரிய இனிப்பை செய்து கொண்டிருந்தனர். அதில் அணியில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் எதிர் அணியினரை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

இரு அணிகளும் இனிப்பை செய்து முடித்து அதை அனிதா நடுவராக இருந்து தீர்ப்பு சொன்னார். அதில் நகரவாசிகள் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார் அனிதா.

இப்படியாக நிகழ்ச்சி இனிப்புடன் ஆரம்பித்தது. இதை போல் இன்னும் நிறைய போட்டிகள் நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதில் கிராம வாசிகளும், நகர வாசிகளும் இணைந்து மக்களை மகிழ்விப்பார்களா என்ற ஆவல் பார்வையாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியோ, எப்ப பார்த்தாலும், என்னையவே டார்கெட் பண்றாரு: குமுறும் பாலாஜி

அடுத்த செய்தி