ஆப்நகரம்

டாஸ்க் சரிபட்டு வரல, பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ்

டாஸ்கின்போது கவின் செய்த காரியத்தை பார்த்த பார்வையாளர்கள் அவரை திட்டியுள்ளனர்.

Samayam Tamil 19 Sep 2019, 2:52 pm
பிக் பாஸ் 3 வீட்டில் தற்போது டாஸ்க் கொடுப்பதால் போட்டியாளர்களின் கவனம் எல்லாம் அதில் தான் உள்ளது. ஆனால் கவினுக்கு மட்டும் கண் எல்லாம் லோஸ்லியா மீது உள்ளது.
Samayam Tamil bigg boss 3


டாஸ்க் செய்தாலும் லோஸ்லியாவுடனான காதலை வளர்க்கத் தவறவில்லை கவின். இந்நிலையில் டாஸ்க் செய்து கொண்டிருக்கும்போது பாஸ் சொல்லிவிட்டு சென்று கவின் லோஸ்லியாவிடம் பேச அதை பார்த்த சக போட்டியாளர்கள் கடுப்பாகினார்கள்.

இருப்பதிலேயே ஷெரின் தான் அதிகமாக கோபப்பட்டு பந்துகள் இருந்த கூடையை எட்டி உதைத்துவிட்டு சென்றார். கவினோ என்ன நியாயமா விளையாட்டிவிட்டீர்கள் எல்லோரும் என்று கோபமாக கேட்டுள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் மாத்தி யோசித்து தான் டாஸ்குகள் கொடுக்கிறார். ஆனால் அப்படியும் நிகழ்ச்சி மொக்கையாக உள்ளது என்கிறார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் தான் அவர் டாஸ்க் சரிபட்டு வராது என்று மறுபடியும் கவின்-லோஸ்லியா காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.



டாஸ்கின் நடுவே கவின்-லோஸ்லியா லவ் பண்ணியதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

கேம் விளையாடும் போது இந்த கவினுக்கும், லோஸ்லியாவுக்கும் காதல் என்ன வேண்டி கிடக்கு. ஏய், கவின் உங்களின் காதலை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலித்து கேவலப்பட வேண்டாம்.

ஷெரின் கவினுக்கு சரியான நெத்தியடி கொடுத்துள்ளார். இந்த கவின், லோஸ்லியா எல்லாம் திருந்தாத ஜென்மங்கள். கவினுக்கு லோஸ்லியாவை காதலிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. இதுவே வேறு யாராவது விழுந்திருந்தால் இந்த கவின் இப்படி ஓடிப் போயிருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஷெரின் பெரிய இவர் மாதிரி கோபப்படுகிறாரே. இதுவே தர்ஷன் அவருக்கு இப்படி செய்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள் கவின் ஆதரவாளர்கள்.

சமூக வலைதளங்களில் கவின், லோஸ்லியாவை கேவலமாக விமர்சிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பார்த்து கவின் மற்றும் லோஸ்லியாவின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பது வழக்கமாகிவிட்டது.

அடுத்த செய்தி