ஆப்நகரம்

பிக் பாஸ் வேல்முருகன் மனைவி, மகள்களை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட பாடகர் வேல்முருகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 8 Dec 2020, 3:11 pm
பிரபல கிராமிய பின்னணி பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி துவக்க நாளில் பேசிய கமல் வேல்முருகன் கிராமிய பாடல்களை தற்போதைய இளைஞர்களும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Samayam Tamil Velmurugan meets Superstar Rajinikanth


ஆனால் வேல்முருகன் பிக் பாஸில் 4 வாரங்கள் மட்டுமே இருந்தார். அவர் மற்றவர்களை பற்றி குறை கூறவே பயப்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்த நிலையில் நான்காவது வாரத்தில் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக் பாஸில் இருந்து வந்த பிறகு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் அவர் அதிகாரபூர்வமாக இணைந்து உள்ளார். அதன் உறுதி செய்யும் விதத்தில் அவர் ஒரு விடீயோவையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். "சூப்பர்ஸ்டாருடன் நானும் என் குடும்பத்தாரும்!" என்று மட்டும் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை அவர் குறிப்பிடவில்லை.

அடுத்த செய்தி