ஆப்நகரம்

Bigg Boss 4 Promo: போடா வாடானு தரம் குறைந்துவிட்டது.. வெளுத்து வாங்கப்போகும் கமல்!

சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என தரக்குறைவாக பேசியது பற்றி கமல் பேசி இருக்கிறார்.

Samayam Tamil 24 Oct 2020, 2:38 pm
பிக் பாஸ் 4 மூன்றாவது வாரத்தை முடிவு செய்ய உள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் வீட்டுக்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் அது பற்றி கமல் பேசி இருக்கிறார்.
Samayam Tamil Kamal Haasan


குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி தான் கமல் பேசி இருக்கிறார்."கொளுத்தி போடுறேன்.. கொளுத்தி போடுறேன் என சொன்னவர் கையிலேயே தற்போது வெடித்துவிட்டது. போட்டியாக இருக்க வேண்டியது, போடா வாடா என தரம் குறைந்துவிட்டது. அதனால் இது (செங்கோல்) யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம். இருக்குற நிலைமையா பார்த்தா நாம் கையில் எடுக்கணும் போல இருக்குகே' என கமல் கூறி இருக்கிறார்.

அதனால் கமல் இந்த வாரம் சனம் ஷெட்டி, சுரேஷ் உள்ளிட்டவர்களை வெளுத்து வாங்க போகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


நாடா இல்லை காடா என்ற பெயரில் நடந்த டாஸ்க் நடந்த நேரத்தில் சனம் ஷெட்டியின் தலையில் கோலால் அடித்தார். அதற்கு பின் கோபமான சனம் ஷெட்டி அவரை வாடா போடா என பேசினார். அதற்கு பிறகு சனம் ஷெட்டியிடம் சுரேஷ் சக்ரவர்த்தி மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கதக்கது.

அடுத்த செய்தி