ஆப்நகரம்

தப்பு பண்ணிட்டியே அனிதா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

அனிதா சம்பத் பற்றி நெட்டிசன்கள் இணையத்தில் அதிகம் மீம்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Samayam Tamil 8 Oct 2020, 1:54 pm
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் இணையத்தில் மிகவும் பாப்புலரானவர் என்பதால் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக ஆகும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் நுழையும்போதே கமலிடம் ஒரு விஷயத்தை கூறினார். 'இதுவரை என்னை ஒரு அசையும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போல தான் டிவியில் பார்த்து இருப்பீர்கள். ஆனால் பிக் பாஸில் என் உண்மையான எமோஷன்களை பார்க்க போகிறீர்கள்' என கூறி இருந்தார்.
Samayam Tamil Anitha Sampath


அவர் சொன்ன படியே அவர் தன் எமோஷன்களை அதிகம் காட்டி முதல் நாளில் இருந்தே சுரேஷ் சக்ரவர்த்தி உடன் சண்டை உருவாகி இருக்கிறது. சாதாரணமாக ஒருவரை ஒருவர் கலாய்த்து பேசி கொண்டு இருந்த விஷயம் வாக்குவாதமாக மாறி தற்போது சண்டையாகவும் மாறிவிட்டது.

இன்றைய பிக் பாஸ் ப்ரொமோவில் பேசும் அனிதா சம்பத் தன் பெயரை கெடுப்பதற்கு தான் சுரேஷ் சக்ரவர்த்தி இப்படி செய்கிறார். ப்ரொமோவில் வருவதற்கு தான் இப்படி தொடர்ந்து என்னை பற்றி பேசுகிறார் என அனிதா சம்பத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அனிதா பிக் பாஸ் வீட்டில் பேசி வரும் விஷயங்கள் பற்றி நெட்டிசன்கள் அதிகம் கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக அவர் குறும்படம் பற்றி பேசுவதை மீம் போட்டு ட்ரோல் செய்கின்றனர்.


அனிதா சம்பத்தை பிக் பாஸ் முதல் சீசன் ஜூலி உடன் ஒப்பிட்டும் சிலர் மீம்கள் பதிவிட்டு இருக்கிறார்கள்.


மேலும் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அனிதா சம்பத் நடுவிரலை காட்டுவது போல செய்து இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.



அனிதா சம்பத் வேண்டுமென்றே நடுவிரலை காட்டினாரா அல்லது நகம் கட்டித்தாரா என்பது பற்றி காரசார விவாதம் தற்போது இணையத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.


அது மட்டும் இன்றி கடந்த மூன்று சீசன்களில் நெகட்டிவ் கமெண்டுகள் பெற்றவர்களுடனும் அனிதா சம்பத்தை நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.

அடுத்த செய்தி