ஆப்நகரம்

Bigg Boss Highlights: கால் சென்டர் டாஸ்க்.. சண்டை களமான பிக் பாஸ் வீடு

இன்று புதிதாக வழங்கப்பட்ட கால் சென்டர் டாஸ்க் பல புதிய பிரச்சனைகளை பிக் பாசில் கொண்டு வந்திருக்கிறது.

Samayam Tamil 24 Nov 2020, 11:33 pm
பிக் பாஸ் வீட்டில் 51ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.
Samayam Tamil Bigg Boss 4 Tamil Day 51 Highlights (Pic Credits: Hotstar)


கதறி அழுத நிஷா

நேற்று விட்ட இடத்தில் இருந்து இன்றைய நிகழ்ச்சி தொடங்கியது. பிக் பாஸ் நாமினேஷன் டாப்பில் கார்டை நிஷாவுக்கு கொடுப்பதாக அனிதா சொன்ன காரணம் தனக்கு பிச்சை போட்டது போல இருந்தது என வெளியில் வந்து ரியோவிடம் கூறி கதறி அழுதார் நிஷா. அப்போது அர்ச்சனாவும் வந்து அங்கு ஓவர் பில்டப்புடன் கத்தினார். 'அன்பு ஜெயிக்கும்னு நெனைக்குறியா?.. ஜெயிக்க வைப்போம்' என கத்தினார்.

மேலும் ரியோ வெற்றி பெற வேண்டும் என தான் நினைப்பது என் தனிப்பட்ட விஷயம் எனவும் நிஷா பேசினார். 'அன்பாக இருந்தால் நடிப்பு என சொல்கிறார்கள். எதுவும் பேசாமல் இருந்தால் safe game என்கிறார்கள். ரொம்ப குத்துறாங்க. இந்த வீடே பொய்யா இருக்கு' என கூறி கதறி அழுதார் நிஷா.

அதன் பின் அனிதா வந்து தான் அந்த கார்டை வைத்து கொள்ளுங்கள் என அதை திருப்பி கொடுக்க முயற்சித்தார்.

கால் சென்டர் டாஸ்க் - Why blood, Same blood

அடுத்த இரண்டு நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற உள்ளது. அதில் பாதி பேர் முதல் கால் சென்டர் ஊழியர்களாகவும், மீதி இருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளராக இருப்பார்கள். அவர்கள் கால் சென்டருக்கு போன் செய்து பேசி அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள். கால் சென்டர் ஊழியர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வாடிக்கையாளரை திருப்தி படுத்தவேண்டும். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும்.

அர்ச்சனா - பாலா கால்

முதல் ஆளாக அர்ச்சனா கன்பெக்ஷன் ரூமில் இருந்து பாலாஜிக்கு அழைப்பு செயதார். அர்ச்சனா கேட்ட முதல் கேள்வியே 'நேற்று பேசும்போது நான் பிடித்தவர்களை முன்னாடி வைத்து விளையாடுவதாக சொன்னீர்கள், அது யார்?' என கேட்டார். சோம், ரியோ மற்றும் கேபி என பாலாஜி பதில் சொன்னார்.

அதன் பின் லவ் பெட், சோம் சரியாக பர்பார்ம் செய்யாதது, ஷிவானி மீதான அன்பு என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். 'I hate you அர்ச்சனா' என சொல்வதற்கு என்ன காரணம் என கேட்டு பாலாஜியை திக்குமுக்காட வைத்தார் அர்ச்சனா. ஆனாலும் அர்ச்சனாவுக்கு தொடர்ந்து சளைக்காமல் பதிலடி கொடுத்தார். இறுதியில் நேரம் முடிந்ததால் அர்ச்சனா அடுத்த வார நாமினேஷனுக்கு சென்றார்.

பாலா கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர் என்ன என அர்ச்சனா அதிகம் force செய்து கேட்டது பற்றி பாலாஜி கோபத்துடன் வெளியில் வந்து பேசினார். இது தொடர்பாக வாக்குவாதமும் நடைபெற்றது.

பாலாஜியை கார்னர் செய்த கேங்

அதன் பின் பாலாஜியை அர்ச்சனா, ரியோ, கேபி உள்ளிட்டவர்கள் சேர்ந்து கார்னர் செய்தனர். அதை பாலாஜியே குறிப்பிட்டு அவர்களுடன் சண்டை போட்டார். ரியோ சத்தமாக கத்தி பேசியதற்கு 'கத்தாம பேசுங்க, நீ என்ன ஹீரோவா' என பாலாஜி கேட்டார்.

அக்கா என கூப்பிடதே: அர்ச்சனா

இனி என்னை அக்கா என கூப்பிடதே என அர்ச்சனா கோபத்துடன் பாலாஜியுடன் கூறினார். மேலும் பாலாஜி கையில் இருந்த பெண் பெயர் பற்றி கேட்டது உன் morals உயர்வாக இருக்கிறது என காட்ட மட்டும் தான், அது என் மகள் மீது சத்தியம் என அர்ச்சனா விளக்கம் கொடுத்தார்.

சனம் - சம்யுக்தா கால்

சனம் கன்பெக்ஷன் ரூமில் இருந்து சம்யுக்தாவுக்கு போன் செய்தார். கலீஜாக பேசுகிறேன் என நீங்கள் எப்படி சொல்லலாம் என கேட்டு வாக்குவாதம் நீண்டுகொண்டே போனது. இறுதியிகள் சனம் நாமினேட் ஆனார்.

அதன் பின் ஆரி வந்து சம்யுக்தாவிடம் சண்டை போட்டார். வளர்ப்பு சரியில்லை என நீ எப்படி சொல்லலாம் என அவர் கேட்டார்.

அடுத்த செய்தி