ஆப்நகரம்

Bigg Boss 4 Highlights: குறும்படம் போட்ட கமல், வெளியேற்றப்பட்ட சம்யுக்தா

பிக் பாஸ் 4ல் இருந்து இன்று சம்யுக்தா வெளியேற்றப்பட்டு உள்ளார்.

Samayam Tamil 29 Nov 2020, 11:04 pm
பிக் பாஸ் 4 வீட்டில் இன்று நடந்த சம்பவங்களின் தொகுப்பு..
Samayam Tamil Samyuktha eliminated from Bigg Boss 4 Tamil (Pic Credits: Hotstar)


நல்லவரா, கெட்டவரா.. வழக்கம்போல கமல் நமக்கு புரியாத விதத்தில் சில நிமிடங்கள் பேசினார். 'இப்போ புரியுதா?' என கமல் நம்மை பார்த்து sarcastic ஆக கேட்பது இதில் ஹலைட்.

கலீஜ் - என்ன அர்த்தம்?

சனம் ஷெட்டியை கலீஜ் என சம்யுக்தா சொன்னது பற்றி விளக்கம் கேட்டார். அதன் பின் அவரே அது பற்றி விளக்கம் கொடுத்தார்.

சம்யுக்தா - ஆரி பிரச்சனைக்கு குறும்படம்

ஆரி தன் தாய்மையை கேள்வி கேட்டுவிட்டார் என பொங்கிய சம்யுக்தாவுக்கு நோஸ்கட் கொடுக்கும் விதத்தில் குறும்படத்தை போட்டு காட்டினார் கமல். ஆரி மீது எந்த தவறும் இல்லை என தெளிவாக தெரிவதாக மற்ற ஹவுஸ்மேட்ஸ் தெரிவித்தனர்.

வளர்ப்பு பற்றி பேசலாமா? - சம்யுக்தாவை விளாசிய கமல்

பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி சம்யுக்தா பேசும் விஷயம் 'வளர்ப்பு சரியில்லை'. ஆரியை பற்றி தான் அவர் அப்படி பேசி வந்தார். இது பற்றி கேள்வி கேட்ட கமல் 'இது இங்கு இருப்பவர்களை பற்றி மட்டும் தான், குடும்பத்தை இழுக்காதீர்கள்' என கண்டித்தார்.

ரம்யா பாண்டியனை கலாய்த்த கமல்

கால் சென்டர் டாஸ்கில் ' ஒவ்வொரு போட்டியாளரை நாமினேஷன் செய்ய காரணம் சொல்லுங்கள்' என கேட்டது போல நீங்களும் செய்யுங்கள் என கமல் கூறினார். அப்போது ரம்யா திணறிய நிலையில் 'இப்போ தெரியுதா.. கேள்வி கேட்பது ஈஸி, பதில் சொல்வது தான் கஷ்டம்' என கூறி கலாய்த்தார்.

ரியோ - கேப்டனுக்கு ஸ்டார் ரேட்டிங்

ரியோ கேப்டனாக எப்படி செயல்பட்டார் என ஸ்டார் ரேட்டிங் கொடுங்கள் என கமல் ஒரு டாஸ்க் கொடுத்தார். அப்போது சனம், ரம்யா மட்டும் ஒரு ஸ்டார் கொடுத்தனர். அனைவரும் ஆச்சர்யம் அடையும் விதமாக பாலாஜி அவருக்கு 5 ஸ்டார் கொடுத்தார்.

எலிமினேஷன்

அடுத்து கமல் எலிமினேஷனுக்கு வந்தார். ஏற்கனவே ஆரி மற்றும் பாலாஜி காப்பாற்றப்பட்டு வீட்ட நிலையில் இன்று முதல் ஆளாக சோம் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன் பின் சனம் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.

அதன் பின் இறுதியில் சம்யுக்தா எலிமினேட் ஆனதாக கமல் அறிவித்தார். அதன் பின் சம்யுக்தா தன் மகனை பார்க்க போவதால் மகிழ்ச்சியாக வெளியில் செல்வதாக சம்யுக்தா கூறினார்.

அடுத்த செய்தி