ஆப்நகரம்

Bigg Boss 4 Tamil: சனம் ஷெட்டியை தாக்கி பேசிய பாலாஜி! அவரை ஜித்தன் ரமேஷ் கேட்டாரு பாரு ஒரு கேள்வி

சனம் ஷெட்டி வாடா போடா என மரியாதை இலலாமல் பேசியது பற்றி பாலாஜி முருகதாஸ் பேசிய நிலையில், அவருக்கு நோஸ்கட் கொடுக்கும் விதத்தில் ஜித்தன் ரமேஷ் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்.

Samayam Tamil 22 Oct 2020, 3:48 pm
பிக் பாஸ் வீட்டில் இன்று பட்டிமன்றம் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக நாடா இல்லை காடா என்ற டாஸ்க் வழங்கப்பட்ட நிலையில் அதில் அடிதடி சண்டை என பல விஷயங்கள் நடந்தது. உச்சகட்டமாக சனம் ஷெட்டி வாடா போடா என சுரேஷ் சக்ரவர்த்தியை திட்டியது தான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil Jithan Ramesh and Balaji Murugadoss


தற்போது மீண்டும் போட்டியாளர்களுக்கு பேசும் டாஸ்க் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. அதில் போட்டியாளர்கள் பிக் பாஸ் குடும்பமா அல்லது போட்டி களமா என்பது பற்றி பேச வேண்டும். இதற்கு முன் வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத் உள்ளிட்டவர்கள் பேசியது காட்டப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவது காட்டப்பட்டு உள்ளது. அதில் அவர் 'பிக் பாஸ் போட்டி களம் தான்' என பேசி இருக்கிறார். மீண்டும் குரூப்பிஸம் பற்றி அவர் மறைமுகமாக பேசி இருக்கிறார். 'குடும்பம் குடும்பமாக இருக்கிறதே தவிர, குடும்பங்கள் இல்லை' என தெரிவித்து உள்ளார் அவர்.

அதன் பின் பேசிய சனம் ஷெட்டி 'நான் பொதுவாகவே அதிகம் ரியாக்ட் செய்வேன்' என தெரிவித்துள்ளார்.

பாலாஜி முருகதாஸ் பேசும்போது சனம் ஷெட்டி வாடா போடா என பேசியது பற்றி குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அதன் பின் பேசிய ஜித்தன் ரமேஷ் 'நீயும் வாயா போயா, மூளை குழம்பிவிட்டதா' என்று தானே பேசினாய் என பாலாஜி முருகதாஸை பார்த்து கேட்டார். இந்த கேள்வி பாலாஜி முருகதாஸை திணற வைத்தது.

அடுத்த செய்தி