ஆப்நகரம்

டபுள் மீனிங்ல பேசுறார்னு நினைக்காதீங்க.. கமல் ஹாசனின் பிக் பாஸ் 4 புதிய ப்ரொமோ

நடிகர் கமல் ஹாசன் தற்போது தற்போது பிக் பாஸ் வீட்டில் மறைமுகமாக அரசியல் பேசி இருப்பது காட்டப்பட்டு இருக்கிறது.

Samayam Tamil 11 Oct 2020, 5:44 pm
கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தாலே எப்போதும் நிகழ்ச்சி பரபரப்பாக தான் இருக்கும். பிக் பாஸ் 4வது சீசனில் இது முதல் வாரம் தான் என்றாலும் போட்டியாளர்கள் நடுவில் அதிக அளவு பிரச்சனை வெடித்திருக்கிறது. அது பற்றி போட்டியாளர்களிடம் கமல் நேற்று பேசினார்.
Samayam Tamil Kamal haasan in Bigg Boss 4


இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமைக்காண ப்ரொமோ வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது. அதில் கமல்ஹாசன் அடுத்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்று இருக்கிறது. அதில் குரல் வாக்கெடுப்பில் தான் தலைவருக்கான வாக்கெடுப்பு நடைபெற்று இருக்கிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா மற்றும் ஷிவானி ஆகியோர் தான் தலைவருக்கான போட்டியில் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்தது. அதன் பின் பேசிய கமல்ஹாசன், 'ஓட்டு போடுறவங்களுக்கு ஒரு அறிவுரை, யோசித்து நல்ல முறையில் போடுங்கள். போட்டுட்டு வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை" என கூறினார். இதை கேட்கும் போதே அவர் தற்போதைய அரசியல் பற்றி தான் பேசுகிறார் என்பது புரிந்திருக்கும்.

"டபுள் மீனிங்ல பேசுறார்யா மறுபடியும் என நினைக்காதீங்க. யோசிச்சு போடுங்க" என கமலே அது பற்றி விளக்கமும் கொடுத்திருக்கிறார்.


இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோவில் சனம் ஷெட்டிக்கு பாலாஜி முருகதாஸ் ஹார்ட் பிரேக் கொடுக்கிறார். பிரச்சனையை ஊதி பெரிதாக்காமல் இருக்க வேண்டும் என அவர் சனம் ஷெட்டியை கேட்டுக்கொள்கிறார். அவர்கள் இடையே நேற்று பெரிய சண்டை நடந்தது குறிப்பிடத்தக்கது. அது பற்றி அவர்கள் நேற்று கமல்ஹாசனிடமே புகார் செய்தார்கள், ஆனால் கமல், ‘இதை தொடர்வதும், தொடராமல் இருப்பதும் உங்கள் விருப்பம்’ என கூறியிருந்தார்.

அடுத்த செய்தி