ஆப்நகரம்

பிக் பாஸ் 4 வீட்டில் புது லவ் ட்ராக் தொடங்கியாச்சு.. லேட்டஸ்ட் ப்ரொமோ

பிக் பாஸ் 4ல் பாலாஜி முருகதாஸ் மற்றும் கேப்ரியலா இடையே காதல் தொடங்கி இருப்பது போல லேட்டஸ்ட் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

Samayam Tamil 16 Oct 2020, 3:24 pm
வழக்கமாக பிக் பாஸ் ஷோ என்றாலே எப்போதும் நிச்சயம் ஒரு லவ் ட்ராக் இருக்கும். கடந்த மூன்று வருடங்களிலும் அப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த வருடம் துவங்கிய 4வது சீசனில் இரண்டு வாரங்கள் ஆகியும் அதற்கான அறிகுறி எதுவும் தெறியாமல் இருந்தது.
Samayam Tamil Balaji Murugadoss and Gabriella


இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் 12ம் நாள் ப்ரோமோவில் பாலாஜி முருகதாஸ் மற்றும் கேப்ரியலா இடையே எதோ இருப்பது போல காட்டி இருக்கிறார்கள்.

கேப்ரியலா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு பாலாஜி அவருடன் பேசுகிறார். 'அவ்வளவு நேரம் நாம் பேசாதது கூட உனக்கு கவலை இல்லைல?' என கேப்ரியலா அவரிடம் கேட்கிறார். 'நாம என்ன ஜோசிய காரங்களாப்பா.. mind voice கேட்ச் பண்ண' என பாலாஜி பதில் சொல்ல, அதற்கு அவர் 'நடிக்காதே' என்று கூறுகிறார்.

' நான் யாரிடமும் நடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, முகத்துக்கு நேராக சொல்லிவிடுவேன்' என பாலாஜி கூறுகிறார். இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நடுவில் பேச்சு செல்கிறது.

இந்த ப்ரோமோ வீடியோவில் பின்னணியில் 'யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ' பாடல் போடப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டில் புது லவ் ட்ராக் துவங்கிவிட்டது என தெரிவித்து வருகிறார்கள்.


இன்று காலை வெளிவந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கேப்ரியலா இருவரும் எமோஷனலாக இருந்தது காட்டப்பட்டு இருந்தது. டாஸ்க் ஒன்றில் கேப்ரியலாவுக்காக சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே எழுந்து நின்று ஆதரவுகொடுத்திருந்தார். உடல் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் தனது முதுகில் தூக்கி இருந்ததை பார்த்து ரசிகர்களும் பாராட்டி இருந்தார்கள்.

அடுத்த செய்தி