ஆப்நகரம்

ராஜுவுடன் சமாதானம் ஆன பாவனி.. ப்ரொமோ பார்த்து உருகும் ரசிகர்கள்!

பிக் பாஸ் 5 இன்றைய ப்ரோமோவில் பாவனி ராஜு மற்றும் சிபி உள்ளிட்டோரிடம் சமாதானம் ஆகி இருப்பது காட்டப்பட்டு இருக்கிறது.

Samayam Tamil 10 Dec 2021, 10:48 am
தன்னுடைய பர்சனல் விஷயம் பற்றி பேசியதற்காக நேற்று பாவனி ராஜு மற்றும் சிபி ஆகியோர் உடன் கொந்தளிப்புடன் சண்டை போடுவது போல காட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த அனைவரும் ஷாக் ஆனார்கள். பாவனிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஆனது.
Samayam Tamil Bigg Boss 5 tamil


பாவனியை பற்றி சிபி மற்றும் ராஜு ஆகியோர் பேசியது ரொம்ப தவறு என நெட்டிசன்கள் விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் புது ப்ரொமோ வீடியோவில் பாவனி அனைவர் உடனும் சமாதானம் ஆகி இருக்கிறார்.

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என ராஜு சொன்ன நிலையில் அதற்காக பாவனி அவரை கட்டிப்பிடித்து நன்றி கூறுகிறார். அண்ணாச்சி, சிபி, நிரூப் ஆகியோருடனும் அவர் சமாதானம் ஆகி இருக்கிறார்.

இந்த ப்ரொமோ பார்த்து நெட்டிசன்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கின்றனர். நேற்று திட்டியவர்கள் இன்று ராஜூவை பாராட்டி வருகின்றனர்.

ப்ரோமோ வீடியோ இதோ.

அடுத்த செய்தி