ஆப்நகரம்

ப்ரொமோ பார்த்து தப்பா நெனச்சிட்டோமே.. தாமரைக்கு ஆதரவு அளிக்கும் நெட்டிசன்கள்

ப்ரொமோ பார்த்து தப்பா நெனச்சிட்டோம்.. தாமரைக்கு ஆதரவு அளிக்கும் நெட்டிசன்கள்

Samayam Tamil 27 Oct 2021, 12:35 am
பிக் பாஸ் 5 நேற்றைய ப்ரொமோ வீடியோ பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் தாமரையை தான் திட்டினார்கள். சுருதி கேம் விளையாடுகிறார், அதை போய் இவர் குறை சொல்லி ஒப்பாரி வைக்கிறாரே என கூறினார்கள்.
Samayam Tamil Thamaraiselvi


ஆனால் முழு எபிசோடை பார்த்த பிறகு தான் தாமரை மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்ததால் 'உங்களை போய் தப்பா நெனைச்சிட்டோமே" என தற்போது ட்விட்டரில் கூறி வருகின்றனர்.

சுருதி வேறு எங்கிருந்தும் காயினை திருடி இருந்தால் அதிக கேம் என எடுத்துக்கொள்ளலாம், ஆனால் உடை மாற்றும் அறையில் தாமரை இருக்கும்போது அங்கு உள்ளே சென்று அவர் அரைகுறை ஆடையில் இருக்கும்போது எடுத்து வந்தது தவறு என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சுருதியை நேற்று பாராட்டியவர்கள் எல்லாம் ஷோ பார்த்துவிட்டு அவரையும் பாவனியையும் கடுமையாக விளாசி வருகின்றனர்.





அடுத்த செய்தி