ஆப்நகரம்

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்! காயின் பயன்படுத்தி பல்பு வாங்கிய நிரூப்

இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்திருக்கிறது. அதில் ஏழு போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

Samayam Tamil 7 Dec 2021, 7:51 am
பிக் பாஸ் 5ல் வாரம்தோறும் திங்கட்கிழமை தலைவரை தேர்வு செய்ய போட்டி மற்றும் அதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வார தலைவர் போட்டியில் அமீர் ஜெயித்தார். ஆனால் பாவனி காயின் பயன்படுத்தி தலைவர்பதவியை பறித்துக்கொண்டார்.
Samayam Tamil Bigg Boss 5 Tamil nomination


அதன் பிறகு நாமினேஷன் தொடங்கியது. அதில் போட்டியாளர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி தலா மூன்று பேரை நாமினேட் செய்தனர். இறுதியில் நாமினேஷன் லிஸ்ட் அறிவிக்கப்பட்டது. அதில் அபினை, இமான், அமீர், நிரூப், அக்ஷரா, தாமரை மற்றும் சிபி ஆகியோர் இருப்பதாக பிக் பாஸ் அறிவிக்கிறார்.

அதனை தொடர்ந்து நிரூப் தனது காயின் பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பிக்க விரும்புவதாக கூறுகிறார். தனக்கு பதிலாக சன்ஜீவை தான் நாமினேட் செய்வதாக சொல்கிறார். ஆனால் அவரை டாஸ்கில் ஜெயித்தால் தான் நாமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் என பிக் பாஸ் கூற நிரூப் சற்று ஷாக் ஆகிறார்.

அதன் பின் நடந்த போட்டியில் சஞ்சீவ் வெற்றி பெற்று விடுகிறார். அதனால் நிரூப் நாமினேஷனில் தொடர்வார் என பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார்.

தற்போது லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்களில் அபினை தான் டேஞ்சர் ஸோனில் இருக்கிறார் என தெரிகிறது. அவர் வெளியேற தான் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த செய்தி