ஆப்நகரம்

ரசிகர்களுக்காக ‘அந்த’ இடத்தில் வளையம் போட்ட அபிராமி: இதெல்லாம் ரொம்ப ஓவரு.!

பிக்பாஸ் அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 29 Jun 2022, 8:07 am
பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.
Samayam Tamil Abhirami
Abhirami


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் சென்றது. இடையில் கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார் அபிராமி. அப்போது சக போட்டியாளர் முகினை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி, நிரூப் இருவரும் காதலர்கள், இவர்களுக்குள் பிரேக்கப் ஆகிவிட்டது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைந்ததும் அபிராமி, பாலாஜி இருவரும் காதலிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இருவர் தொடர்பான செய்திகளும் இணையத்தில் தீயாக பரவியது.

பிக்பாஸ் அல்டிமேட்டில் ஸ்மோக்கிங் ஏரியாவில் நடக்கும் சம்பவங்களும் காண்பிக்கப்பட்டது. அங்கு அபிராமி புகைப்பிடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இயங்கி வரும் அபிராமி, சமீபத்தில் மூக்கில் வளையம் போட இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6-ல் டி இமானின் மாஜி மனைவி: அப்போ அதுக்கு பஞ்சமே இருக்காது.!

அதில் 58 சதவீதம் பேர் போடுங்கள் என்றும், 42 சதவீதம் பேர் போட வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். அதிக அளவிலான ரசிகர்கள் போட சொன்னதால் உடனடியாக மூக்கில் வளையம் போட்டுக்கொண்டு அதன் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இதுக்கெல்லாம் வாக்கெடுப்பு நடத்துவாங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி