ஆப்நகரம்

Bigg Boss Tamil 6: அதைப்பத்தி மட்டும் பேசாதீங்க... அலறிய அமுதவாணன்... ஷாக்கான விக்ரமன்!

Bigg Boss Tamil 6: பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட்டாக வந்துள்ள விஜே ஷோபனாவிடம் அதைப்பற்றி மட்டும் பேசாதீர்கள் என அலறியுள்ளார் அமுதவாணன்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 10 Jan 2023, 4:51 pm
பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட்டாக வந்துள்ள விஜே ஷோபனாவிடம் அதைப்பற்றி மட்டும் பேசாதீர்கள் என அலறியுள்ளார் அமுதவாணன்.
Samayam Tamil bigg boss tamil 6 vj shobana and vj parvathy shocks housemates
Bigg Boss Tamil 6: அதைப்பத்தி மட்டும் பேசாதீங்க... அலறிய அமுதவாணன்... ஷாக்கான விக்ரமன்!



நாமினேஷனில் 6 பேர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஃபினாலேவை நெருங்கிவிட்டது. 21 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். அமுதவாணன், ஃபினாலேவுக்கான டிக்கெட்டை தட்டி தூக்கியுள்ளதால் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் அவரை மற்ற அனைத்து போட்டியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Varisu, Thunivu: இடியாய் வந்த சேதி... துணிவு, வாரிசு படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து!

பிக்பாஸ் வீட்டில் பிரபலங்கள்

இந்நிலையில் வெளியில் இருந்து பிரபலங்கள் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த 2 நாட்களாக சென்று வருகின்றனர். நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அகமது ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறி பீதியை கிளப்பினர். ஆனால் அவர்களிடமும் மல்லுக்கட்டினார் அசீம்.

Samantha: அழகு போயிடுச்சு... வேதனைப்பட்ட ரசிகர்... கடுப்பான சமந்தா!

ஒன் டூ ஒன்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று விஜே பார்வதியும் விஜே ஷோபனாவும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஒன் டூ ஒன் என ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் விளையாடும் விதத்தை வைத்து தங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

Varisu, Thunivu: நாளை வெளியாகும் வாரிசு, துணிவு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை!

அலறிய அமுதவாணன்

இதில் அமுதவாணனிடம் கேள்வி கேட்கும் விஜே ஷோபனா, நல்லாதானே விளையாடினீங்க திடீர்னு ஏன் எமோஷன்ஸுக்கு இடம் கொடுத்தீங்க என்று கேட்கிறார். விஜே ஷோபனா ஜனனியை பற்றிதான் கேட்கிறார் என்பதை தெரிந்துக் கொண்ட அமுதவாணன், தயவு செய்து அதைப்பற்றி மட்டும் பேசி கிரியேட் செய்யாதீர்கள் என கையெடுத்து கும்பிட்டு அலறுகிறார்.

Bigg Boss Tamil 6: பிக்பாஸ் மேல அவ்ளோ லவ்வா.... தனலெட்சுமி செய்த காரியத்த பாருங்க!

ஷாக்கான விக்ரமன்

அடுத்ததாக விஜே பார்வதி விக்ரமனிடம், நீங்கள் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதாலேயே ஒரு ஹெட்மாஸ்டர் பிஹேவிங் உங்களிடம் உள்ளது, இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என கேட்டு விக்ரமனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார். மேலும் விக்ரமனை நக்கலடிக்கும் வகையில், ஒன்னு தூங்க வேண்டியது, இல்லனா கொற சொல்ல வேண்டியது என குறிப்பிட்டிருக்கும் சில மீம்ஸ்களையும் ஷேர் செய்து டேமெஜ்ஜாக்கியுள்ளார்.

Varisu Review: வாரிசு படத்துல உள்ள ஒரே 'மைனஸ்' இதுதானாம்!

Vikraman

எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி