ஆப்நகரம்

BB3 Start Date, Time: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 ஒளிபரப்பு நேரத்தில் இப்படியொரு மாற்றமா? அதிர்ச்சியில் டிவி சீரியல்!

விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Jun 2019, 2:51 pm
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
Samayam Tamil BiggBoss3


வரும் 23ஆம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல் நடிகர் கமல் ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

15 பிரபலங்கள் சேர்ந்து, ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிப்பார்கள். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இதில் பொதுமக்களின் வாக்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

கடந்த இரு சீசன்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் இம்முறை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தனியார் தொலைக்காட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியல், இனி எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில், ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்தவற்றில் ஒன்று “பாரதி கண்ணம்மா”.
View this post on Instagram #MarkYourCalendars #BiggBossTamil launches on 23rd @ 8 pm.. #VijayTV #VijayTelevision #KamalHaasan A post shared by Vijay Television (@vijaytelevision) on Jun 8, 2019 at 10:47pm PDT

பிக் பாஸ் நிகழ்ச்சி 8 மணிக்கு தொடங்கி, 9.30 மணி வரை ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேற்கூறிய சீரியல், இனி எந்த நேரத்திற்கு மாற்றப்படும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

அடுத்த செய்தி