ஆப்நகரம்

Bigg Boss Unseen: ரம்யா - சோம் ரொமான்ஸ் இப்படி போகுதா?

ரம்யா பாண்டியன் கொடுத்த ஒரு சாக்லெட்டை சோம் பத்திரமாக இன்னும் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறார். அர்ச்சனா அதை கூறி கிண்டல் செய்து இருப்பது unseen ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

Samayam Tamil 19 Nov 2020, 8:47 pm
பிக் பாஸ் 4ல் ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் மிக நெருக்கமாக இருந்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் சோம் மற்றும் ரம்யா இடையே ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருப்பது போல தொடர்ந்து காட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான்.
Samayam Tamil Bigg Boss 4 Tamil Unseen Promo


இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் ஷோவின் அன்சீன் ப்ரொமோ வீடியோ தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் ஒரு சாக்லேட்டை வைத்து இருவருக்கும் நடுவில் ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

ரம்யா பாண்டியன் கொடுத்த ஒரு சாக்லேட்டை சோம் சாப்பிடாமல் அப்படியே இன்னும் வைத்திருக்கிறாராம். அதை எப்போது அனைவருக்கும் எப்போது கொடுப்பாய் என அர்ச்சனா அனைவர் முன்பும் சோமை கலாய்த்து இருந்தார். அப்போது ரம்யா பாண்டியன் 'நான் சாக்லேட்டை உங்கள் கையில் கொடுத்தேன். அதை சாப்பிடாதது உங்கள் தவறு என சொல்கிறார்.

தான் தினமும் கேட்டும் சோம் அதை தரவே இல்லை என அர்ச்சனா இதை ஒரு புகராகவே தெரிவித்தார். இப்போது எடுத்து உடைத்து எல்லோருக்கும் கொடு என அர்ச்சனா கேட்க, 'ஆனால் எனக்கு அந்த மனசு வரல' என சோம் ஒரே பதிலில் அவரை ஆஃப் செய்துவிட்டார்.


ஷிவானி மற்றும் பாலாஜி ரொமான்ஸ் அதிக விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், ரம்யா - சோம் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லையே என ட்விட்டரில் பலரும் பதிவிட்டு இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி