ஆப்நகரம்

BiggBoss: ஷாரீக்கின் ஆச்சர்ய வருகையால் வெட்கத்தில் குழையும் ஐஸ்வர்யா

இறுதிப்போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவிற்கு, லவ் சர்பரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக்பாஸ்.

Samayam Tamil 25 Sep 2018, 4:42 pm
இன்றைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடர்பாக வெளிவந்துள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டுக்கு முன்னாள் போட்டியாளர் ஷாரீக் விருந்தினராக வந்து சர்பரைஸ் தருகிறார் . இது ஐஸ்வர்யாவை ஏகத்துக்கும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது.
Samayam Tamil 10-35244082-1537859630


ரியாலிட்டி ஷோக்களில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், முன்னாள் போட்டியாளர்கள் தினமும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி நேற்று வைஷ்ணவி மற்றும் ரம்யா என்.எஸ்.கே வந்து போட்டியாளர்களுக்கு ஆச்சர்யம் அளித்தனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தாவுக்கு லவ் சர்பரைஸ் அளிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரும், ஐஸ்வர்யாவின் நெருங்கிய நண்பராக அறியப்படுவருமான ஷாரீக், கன்ஃபெஷன் அறையில் காத்திருக்கிறார். அதை பார்க்கும் ஐஸ்வர்யா ஆச்சர்யத்தில் நெகிழ்ச்சி அடைந்து அவரை அரவணைத்துக் கொள்கிறார்.

மேலும், ஷாரிக்கை எதிர்ப்பார்க்காத ஐஸ்வர்யா லவ் கலந்த மகிழ்ச்சியை மனதிற்குள் வைத்துக் கொண்டது அவரது முகத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்துவது போல காட்சிகள் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்த ஷாரீக் மற்றும் நித்யாவை இறுதி போட்டியாளர்கள் வரவேற்றனர். ஐஸ்வர்யாவின் காதல் கலந்த பார்வையை பார்க்கும் விஜியலட்சுமி ”இப்படி ஒரு ஐஸ்வர்யாவ இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையேம்மா” என்று கலாய்க்க, வெட்கத்தில் ஐஸ்வர்யாவின் முகம் சிவந்து போகிறது.

தலை முடியை கோதும் படியே ஐஸ்வர்யா மற்றொரு பக்கம் திரும்பி கொள்வதுடன் அந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. யாஷிகா, மகதுக்கு இடையே பிக்பாஸ் வீட்டில் காதல் உருவானது. ஆனால் அதன் தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை.

அதற்கு முன்னதாகவே ஐஸ்வர்யா மீதான காதலை ஷாரீக் வெளிப்படுத்தினார் என்றாலும், வயதில் ஐஸ்வர்யாவை விட ஷாரீக் 9 ஆண்டுகள் சிறியவர் என்பதால் நெட்டிசன்கள் இருவரையும் வறுத்தெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில் மீண்டும் இவர்களது சந்திப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த காதல் குறித்து மறந்து போன விவதாங்களுக்கு மீண்டும் சமூகவலைதளங்களில் புத்துயிர் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி