ஆப்நகரம்

Bigg Boss 4: சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு ராக் ஸ்டார்.. நடனத்தை வியந்து பாராட்டிய பிரபல டான்ஸ் மாஸ்டர்

நேற்று பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி ஆடிய நடனத்தை பார்த்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் அவரை பாராட்டி உள்ளார்.

Samayam Tamil 15 Oct 2020, 11:15 am
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நடன டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக ஃசோபா இருக்கும் லிவிங் ஏரியாவில் ஒரு மேடை போடப்பட்டு இருந்தது. பிக் பாஸ் வீட்டின் வெளியே ஒரு கன்வேயர் பெல்ட் வைக்கப்பட்டு இருந்தது. அதில் அவ்வப்போது ஒரு பாக்ஸ் வரும் என்றும் அதில் இரண்டு நபர்களுக்கான உடை இருக்கும். அதை அவர்கள் இருவரும் அணிந்துகொண்டு உடனே பிக் பாஸ் வீட்டுக்குள் போடப்பட்டு இருக்கும் மேடைக்கு சென்று நடனம் ஆட வேண்டும்.
Samayam Tamil Suresh Chakravarthy and Anitha Dance


முதலில் ஆஜித் மற்றும் கேப்ரியலா ஜோடிக்கு உடை வந்தது. அவர்களுக்காக மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் ஒலிபரப்பட்டது. அதற்க்கு அவர்கள் நடனம் ஆடினர். அதன் பிறகு நிஷா மற்றும் ரியோ இருவரும் 'ஆடலுடன் பாடலை கேட்டு' என்ற எம்ஜிஆர் பாடலுக்கு நடனம் ஆடினார். அவர்களை தொடர்ந்து வேல்முருகன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் ஆடினார்கள்.

அதன் பின் கன்வேயர் பெல்ட்டில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதாவுக்கான உடை வந்தது. பிக் பாஸ் இப்படி ஒரு ஜோடியை தேர்ந்தெடுத்து இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். அதன் பின் அவர்கள் மேடையில் சின்ன மச்சான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆட துவங்கினர்.

அனிதா தனது நடன அசைவுகளால் கவர்ந்தாலும், சுரேஷ் சக்ரவர்த்தி தன் expressionகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இருவரும் நடனம் ஆடுவதை பார்த்து மொத்த பிக் பாஸ் வீடும் ஆச்சர்யப்பட்டது. அவர்கள் ஆடி முடித்தபிறகு அதிகம் அவர்களை பாராட்டினார்கள்.

மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி நடனத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை தற்போது பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் ட்விட்டரில் சுரேஷ் சக்ரவர்த்தியின் நடனத்தை பாராட்டி இருக்கிறார். அவர் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் நடனம் கோரியோகிராப் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு ராக்ஸ்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். "Suresh seriously rockstar wow energy max" என சதீஷ் ட்விட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.


மேலும் பல ரசிகர்களும் சுரேஷ் சக்ரவர்த்தியின் நடனத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


அடுத்த செய்தி