ஆப்நகரம்

Bigg Boss 6: பிக் பாஸ் வீட்டுக்கு போகும் ஜி.பி. முத்து, சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம்

ஜி.பி. முத்து மற்றும் சரவணன் மீனாட்சி தொடர் பிரபலம் ஒருவர் பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்கிறார்களாம்.

Samayam Tamil 3 Oct 2022, 9:38 am
யூடியூப் பிரபலமான ஜி.பி. முத்து பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாம்.
Samayam Tamil gp muthu and saravanan meenatchi serial fame to participate in bigg boss tamil 6
Bigg Boss 6: பிக் பாஸ் வீட்டுக்கு போகும் ஜி.பி. முத்து, சரவணன் மீனாட்சி சீரியல் பிரபலம்



பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி துவங்கவிருக்கிறது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் பற்றி தகவல் வெளியாகத் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் தான் அந்த யூடியூப் பிரபலத்தின் பெயர் அடிபடுகிறது.

ஜி.பி. முத்து

யூடியூப் பிரபலமான ஜி.பி. முத்து பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாம். அவர் வந்தால் கன்டென்ட்டுக்கு குறைவே இருக்காது. வரட்டும், வரட்டும் பார்த்துக்கலாம் என்கிறார்கள் பார்வையாளர்கள். முத்து வருவார் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் பிரபலம் ஒருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவது உறுதியாகிவிட்டதாம். இதென்ன விஜய் டிவி பிரபலங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். என்ன பிக் பாஸ் இதெல்லாம் என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாடல்

சூப்பர் மாடல் ஒருவர், வெளிநாட்டில் வசித்து வரும் சினிமா விமர்சகர் ஒருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவது உறுதியாகிவிட்டதாம். மேலும் ராபர்ட் மாஸ்டரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே இந்த சீசனில் யாரை வைத்து காதல் டிராக்கை ஓட்டுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி