ஆப்நகரம்

சனம் தான் எலிமினேஷன்.. மறைமுகமாக கமல் சொல்லிவிட்டாரா? - லேட்டஸ்ட் ப்ரோமோ

சனம் ஷெட்டி எலிமினேஷன் பற்றி தான் கமல் இப்படி மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் பேசி இருக்கிறாரா?

Samayam Tamil 6 Dec 2020, 8:51 pm
பிக் பாஸ் 4ல் எலிமினேஷன் பற்றி பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து ப்ரொமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் சனம் ஷெட்டி, அனிதா மற்றும் ஷிவானி ஆகிய மூவர் மட்டும் இறுதியில் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது காட்டப்பட்டு இருந்தது.
Samayam Tamil Kamal Haasan in Bigg Boss 4 Tamil


இதில் இருந்து யார் வெளியேறாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என கமல் கேட்டபோது அதிகம் பேர் சனம் ஷெட்டியின் பெயரை தான் கூறினார்.

ஆனால் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் கமல் பேசும்போது 'வீட்டில் ஒரு எண்ணமும், நாட்டில் ஒரு எண்ணமும் இருக்க கூடும்' என தெரிவித்து உள்ளார். அதனால் சனம் ஷெட்டி எலிமினேஷனை கமல் மறைமுகமாக உறுதி செய்துவிட்டாரோ என்றே தோன்றுகிறது.


மக்கள் சென்ன செய்தி சொல்லி இருக்கிறார்கள் என கமல் எலிமினேஷன் கார்டை காட்டும் முன்பு போட்டியாளர்கள் மனநிலை பற்றியும் கேட்கிறார். அப்போது பேசிய சனம் தான் வீட்டில் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என்றும் அதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் அனிதா பேசும்போது தான் போனாலும் மனநிறைவுடன் தான் போவேன் என்றும் இங்கே இருந்தாலும் இதற்கு பிறகு சிறப்பாக விளையாடுவேன் என்று தெரிவித்து இருந்தார்.

ஷிவானி பேசும்போது மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

அடுத்த செய்தி