ஆப்நகரம்

அதென்ன கமலுக்கு பதில் சிம்பு: ஓ, இது தான் மேட்டரா பிக் பாஸ்?

பிக் பாஸ் அல்டிமேட்டில் கமலுக்கு பதில் சிம்புவை ஏன் தேர்வு செய்தார்கள் என்பதற்கு பார்வையாளர்களே பதில் அளித்திருக்கிறார்கள்.

Samayam Tamil 25 Feb 2022, 3:09 pm
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்குவது குறித்து விவாதம் நடக்கிறது.
Samayam Tamil is this why simbu replaces kamal haasan in bigg boss ultimate
அதென்ன கமலுக்கு பதில் சிம்பு: ஓ, இது தான் மேட்டரா பிக் பாஸ்?


பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸை போன்றே இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தன் விக்ரம் பட வேலைகள் பாதிப்பதாகக் கூறி பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிவிட்டார்.

சிம்பு

கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஆளான சிம்புவை அழைத்து வந்திருக்கிறார்கள். ப்ரொமோ வீடியோவில் கூட, இதை எதிர்பார்க்கவில்லைல என சிம்பு கேட்கிறார். ஆமா், பாஸ், ஆமாம் என்றார்கள் ரசிகர்கள்.

கமல்

கமலுக்கு பதில் சிம்பு ஏன் என்பதற்கு பிக் பாஸ் பார்வையாளர்களே ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்து படிப்படியாக முன்னேறி பெரிய ஆளானவர் கமல். சிம்புவும் குட்டிப் பையனாக கோலிவுட்டுக்கு வந்தார். கமலை போன்று சினிமாவில் பல்வேறு விஷயங்களை கற்றறிந்தவர். மேலும் நன்றாக பேசுவார். அதனால் தான் அவரை அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ஓவியா

பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக ஓவியாக வருகிறாராம். ஓவியாவும், சிம்புவும் காதலித்ததாக ஒரு கட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சிம்பு வந்த கையோடு ஓவியாவை அழைத்து வருகிறார்கள். பழைய காதல் விஷயத்தை பற்றி பேசுவார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி