ஆப்நகரம்

Kavin மைண்ட் வாய்ஸுன்னு நினைச்சு இப்படி சத்தமா சொல்லிட்டீங்களே பிக் பாஸ்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களால் ஒரு வசனத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

Samayam Tamil 25 Sep 2019, 1:07 pm
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினை கடந்த இரண்டு வாரங்களாக காப்பாற்றியுள்ளார்கள். இந்த வாரமும் கவின் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை வெளியேற்ற விரும்பி பலர் ஓட்டு போட்டு, ஓட்டு போட்டு டயர்டாகிவிட்டனர்.
Samayam Tamil kavin


இந்த வாரமும் பிக் பாஸ் கவினை காப்பாற்றுவார். காப்பாற்றுவது என்ன டைட்டிலையும் கவினுக்கு தான் கொடுக்கப் போகிறார் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் போட்டியாளர்களான ஜனனியும், ரித்விகாவும் பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் ரித்விகா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஜனனி மட்டுமே போட்டியாளர்களின் குணாதிசயங்கள் பற்றி பேசியுள்ளார்.



தர்ஷன் தனது ரோல் மாறாமல் அப்படியே இருப்பதாக தெரிவித்த ஜனனி கவினை பற்றி கூறியதை கேட்ட பார்வையாளர்களோ, ஹய்யோ பிக் பாஸ் மைண்ட் வாய்ஸுன்னு நினைத்து இந்தம்மா மூலமாக சத்தமாக சொல்லிவிட்டீர்களே என்று தெரிவித்துள்ளனர்.

Read more : இதுக்கு பெயர் தான் 'எச்ச': எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் பிக் பாஸ்

கவின் பற்றி ஜனனி கூறியதாவது,

அடி வாங்கியது நான் தான். அதனால் கோப்பை எனக்குத் தான். உங்க கதையில் நீங்க தான் ஹீரோ, நீங்க தான் வில்லன் என்று தெரிவித்துள்ளார்.

ஆக, டைட்டில் கவினுக்கு தான் என்பதை ஜனனி மூலம் சொல்லாமல் சொல்லிவிட்டார் பிக் பாஸ். ப்ரொமோ வீடிோவை பார்த்தவர்களோ, ஹீரோ, வில்லன் மட்டும் அல்ல காமெடி பீஸும் கவின் தான் என்று விமர்சித்துள்ளனர். என்ன ஒரு அதிசயம், இதுவரை வெளியான இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலுமே லோஸ்லியாவை பக்கத்தில் காட்டவில்லை.

Read more: பிக் பாஸ் வீட்டிற்கு யார் வந்திருக்கிறாங்கன்னு பாருங்க: என்ன நடக்கப் போகுதோ?

அடுத்த செய்தி