ஆப்நகரம்

பிக் பாஸ் வீட்டில் ஜெயம் ரவி.. எதற்கு வந்திருக்கிறார் தெரியுமா

ஜெயம் ரவி பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வந்திருக்கிறார். பிக் பாஸ் ஷோ பற்றி அவர் என்ன கூறி இருக்கிறார் என ப்ரொமோ வீடியோவில் பாருங்கள்..

Samayam Tamil 27 Dec 2020, 10:40 am
பிக் பாஸ் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. அதிலும் போட்டியாளர்கள் பலரும் பல்வேறு விதமான பிரச்சனைகளை தினம்தோறும் உருவாக்கி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil Jayam Ravi in Bigg Boss 4


இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு நடிகர் ஜெயம் ரவி வந்திருக்கிறார். அது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. அவர் ஏன் வந்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து உள்ள பூமி படம் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் தான் ஜெயம் ரவி பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை பார்த்து பேசிய கமல் "வின்னிங் டைம் வந்துடுச்சு என நினைக்கிறேன். சூப்பரா விளையாடுறீங்க, பயங்கரமா இருக்கு. செம என்டர்டெயினிங்காக இருக்கு. உங்களது உண்மையான selfஐ எப்போதும் காட்டுவது போல காட்டினாலே போதும். உங்களை வெளியில் வேற மாதிரி பாத்துட்டு இருக்கோம். அங்க தெரியுமா தெரியல" என ரவி கூறுகிறார்.

பிக் பாஸ் ரெகுலராக பார்கிறீர்களா என கமல் கேட்க "நீங்கள் எது பண்ணாலும் பார்ப்பேன் சார். நான் உங்களுடைய வெறித்தனமாக ஒரு பக்தன்" எனவும் ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.


போகன், ரோமியோ ஜூலியட் படங்களுக்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் பூமி படத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கின்றனர். பூமி படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் ஜெயம் ரவி இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த படம் ஜெயம் ரவியின் கெரியரில் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி