ஆப்நகரம்

Sandy Bigg Boss: என்னுடைய பரிசு கையிலேயே இருக்கு: 2 ஆவது இடம் பிடித்த சாண்டி!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று பிரமாண்டமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் முகென் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். சாண்டி 2 ஆவது இடமும், லோஸ்லியா 3 ஆவது இடமும் பிடித்தனர்.

Samayam Tamil 7 Oct 2019, 8:27 am
விஜய் தொலைக்காட்சியில், பரபரப்பாக சென்ற நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில், சாண்டி, முகென், லோஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றனர். இவர்களில், ஷெரினை, கடந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட ரித்விகா வெளியில் அழைத்துச் சென்றார். இவர்தான் பிக் பாஸ் தமிழ் 3 டிராபியை பிக் பாஸ் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil sandy runner


Bigg Boss 3 Winner, Mugen Rao: அந்நியனுக்கு இப்படியொரு அங்கீகாரம்: டைட்டில் வின்னராக தேர்வான முகென் ராவ்!

இதையடுத்து, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் முகெனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்,பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். வந்த கையோடு ஒரு பாடல் பாடிய பின்னர், லோஸ்லியாவை வெளியில் அழைத்துச் சென்றார். இது, கவின் மற்றும் லோஸ்லியா ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கவினின் நண்பர்கள், சாண்டி, முகென் இருப்பது அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.

Bigg Boss Winner: டைட்டில் வின்னரான முகெனுக்கு டிராபி, ரூ.50 லட்சம் பரிசு வழங்கிய கமல் ஹாசன்!



இறுதிப் போட்டியில் இடம் பெற்றிருந்த சாண்டியும், முகென் தான் டைட்டில் வின்னராக வரவேண்டும் விரும்பியுள்ளார். அவர் விரும்பியவாறே பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், முகெனுக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்!


அடுத்த செய்தி