ஆப்நகரம்

Episode 77 Highlights: ஷெரின் முகத்தில் சாயம் பூசிய தர்ஷன்: ஒரு லிட்டர் ஐஸ்கிரீம்மை சாப்பிட்ட லோஸ்லியா!

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லோஸ்லியா தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், வனிதா, சாண்டி, ஷெரின், கவின், தர்ஷன் ஆகியோர் இந்த வாரத்திற்கு நாமினெட் செய்யப்பட்டனர்.

Samayam Tamil 10 Sep 2019, 6:56 am
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 12ஆவது வாரத்தில் கவின், லோஸ்லியா, ஷெரின், தர்ஷன், வனிதா, முகென், சாண்டி ஆகிய 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
Samayam Tamil Tharshan


வனிதா குற்றச்சாட்டு:

கேப்டன்சி டாஸ்க் தவறாக பயன்படுத்தப்படுவதாக வனிதா குற்றம் சாட்டினார். காரணம், நாமினேஷனிலிருந்து தப்பிப்பதற்காகவே போட்டியாளர்கள் இந்த கேப்டன்சி டாஸ்க்கை செய்வதாகவும், இதில் உண்மை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆதலால், இந்த கேப்டன்சி டாஸ்க்கில் எனக்கு விருப்பமில்லை. அதனால், நான் விளையாடவில்லை என்றார். இதற்கு பிக் பாஸ் மறுப்பு தெரிவித்தார். ஆதலால், போட்டியில் பங்கேற்றார்.

Episode 76 Highlights: முதன் முதலில் ரகசிய அறையில் சேரன்: எத்தனை நாட்கள்?

இதில், வனிதா, தர்ஷன், லோஸ்லியா ஆகியோர் போட்டியிட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்னரே வனிதாதான் விட்டுக்கொடுப்பதாக போட்டியிலிருந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே தர்ஷனும் தனக்கு கால் வலிப்பதாக கூறி போட்டியிலிருந்து பின் வாங்கினார்.

ஏன், தர்ஷன் இவ்வாறு செய்ததாக லோஸ்லியா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எப்படி, மற்றவர்கள் விட்டுக்கொடுத்து நீ ஜெயிப்பது பிடிக்காது, அதே போன்றுதான், நீ விட்டுக்கொடுத்து நான் ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் லோஸ்லியா.

12ஆவது வாரத்தில் முதல் முறையாக தலைவியான லோஸ்லியா!

இதையடுத்து, இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது. இதில், ஏற்கனவே கவின் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டதால், அவரை பெயரை இங்கு யாரும் குறிப்பிடவில்லை. இந்த வாரம் நாமினேஷனுக்கு வனிதா (தர்ஷன், ஷெரின்), கவின் (வனிதா, ஷெரின்), லோஸ்லியா (வனிதா, ஷெரின்), சாண்டி (வனிதா, ஷெரின்), ஷெரின் (வனிதா, சாண்டி), முகென் (வனிதா, தர்ஷன்), தர்ஷன் (வனிதா, சாண்டி) ஆகியோர் ஏதோ ஒரு காரணத்திற்காக மற்ற போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். ஆனால், இங்கு வனிதா நாமினெட் செய்யப்பட்டதற்கான காரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில், இந்த வாரத்திற்கு கவின், வனிதா, தர்ஷன், ஷெரின், சாண்டி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கவின், ஷெரின், சாண்டி, தர்ஷன் வெளியேறுவதற்கு வாய்ப்பில்லை. மாறாக, வனிதா இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து போட்டியாளர்களுக்கு மீயூசிக் போடப்படும் போது, பந்தை மற்ற போட்டியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இறுதியில், பந்து யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சீட்டை எடுத்து, அதில் எழுதப்பட்டிருப்பதை யாரும் ஒரு போட்டியாளரை செய்ய வைக்க வேண்டும். இதில், தோற்ற போட்டியாளர் சேரை எடுத்துக் கொண்டு வெளியில், சென்றுவிட வேண்டும். கிட்டத்தட்ட மியூச்சிகல் சேர் போன்ற ஒரு டாஸ்க்தான் இது.

வனிதா, தர்ஷன் விட்டுக்கொடுத்த தலைவர் பதவி: லோஸ்லியா என்ன செய்வார்?

ஐஸ்கிரீம், உப்பு காஃபி:

இதில், முதலில் அவுட்டானது சாண்டிதான். அவருக்கு ஐஸ்கிரீம் கொடுக்கப்பட்டது. ஒரு லிட்டர் ஐஸ்கிரீம்மை லோஸ்லியாவை சாப்பிட வைத்தார். இவரைத் தொடர்ந்து அவுட்டான வனிதாவிற்கு உப்பு காஃபி குடிக்கும் டாஸ்க் கொடுக்கவே, தர்ஷன் அதனை குடித்து முடித்தார்.

பக்கெட்டில் ஐஸ் வாட்டர்:

3ஆவதாக வெளியேறிய கவின், சாண்டிக்கு பக்கெட்டில் இருக்கும் ஐஸ் வாட்டரை தலையில் ஊற்றும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. 4ஆவதாக வந்த ஷெரின், கவின் தலையில் 10 முட்டை உடைக்கும் டாஸ்க் கொடுத்தார். அதனை கவின், சரியாக செய்து முடித்தார்.

கிரில் சிக்கன்

5ஆவதாக முகென் ஆட்டமிழந்தார். இவர் தேர்வு செய்யும் போட்டியாளர் கிரில் சிக்கன் சாப்பிட வேண்டும். இதனை தர்ஷன் சாப்பிட்டார். ஷெரினுக்கு கொஞ்சம் கொடுக்கவே தர்ஷனுக்கு வார்னிங் கொடுக்கப்பட்டது.

இதனையெல்லாம், சேரன் ரகசிய அறையிலிருந்து வேடிக்கைப் பார்த்தார். அப்போது, காதல் விவகாரம் பற்றி இனிமேல் இங்கு பேச மாட்டேன் என்று கூறிய கவின், தற்போது அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார் என்று அனைவரையும் பார்க்க வேண்டும் என்று எச்சரித்தார்.

அடுத்த செய்தி