ஆப்நகரம்

கமலின் ‘பிக் பாஸ் 2’க்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!!

கமல் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 2’ முதல் சீசனைக் காட்டிலும் அதிக அளவு பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 29 Jun 2018, 1:21 pm
கமல் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 2’ முதல் சீசனைக் காட்டிலும் அதிக அளவு பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil கமலின் ‘பிக் பாஸ் 2’க்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!!
கமலின் ‘பிக் பாஸ் 2’க்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!!


தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் என்று கூறினால் மிகையாகாது.

அந்த வகையில், அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் மும்தாஜ், ஜனனி அயர், மகத், யாஷிகா ஆனந்த், தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சீசனைக் காட்டிலும், இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுள்ளதாக, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான, ஒப்பீடு படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னையில் 7.0 என்ற டிவி ரேட்டிங்கை கொண்டிருந்த பிக்பாஸ், இந்த ஆண்டு 12.8 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மற்ற பகுதிகளில் 5.2 ஆக இருந்த டிவி ரேட்டிங், இந்த சீசனில் 9.7 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி