ஆப்நகரம்

கமலுக்கு கொரோனா.. பிக் பாஸ் ஷோவுக்கு வந்த சிக்கல்! இனி தொகுத்து வழங்கப்போவது இவரா?

கமலுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி இருப்பதால் இந்த வார பிக் பாஸ் ஷோ கேள்விக்குறியாகி இருக்கிறது.

Samayam Tamil 22 Nov 2021, 9:23 pm
தற்போது நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தொற்றால் பாதிக்கப்படுவதாக வரும் செய்திகள் குறைந்தபாடில்லை. தற்போது நடிகர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி இருப்பதாக தகவல் வெளியிட்டு இருக்கிறார். அவர் சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Kamalhaasan


அவர் சொந்தமாக ஒரு துணி பிராண்ட் துவங்கி இருக்கும் நிலையில் அதன் விளம்பரத்திற்காக தான் கமல் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்று கதர் துணிகளை அறிமுகம் செய்ததாக பிக் பாஸ் ஷோவில் பேசி இருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிகாகோவில் பேசி இருக்கிறேன் அடுத்து நியூ யார்க் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்வேன் என கூறி இருந்தார்.

பிக் பாஸுக்கு பிறகு அவருக்கு cough ஏற்பட்ட நிலையில் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. அதை அவரே ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார்.

கமலுக்கு கொரோனா என்பதால் இந்த வார இறுதியில் பிக் பாஸ் ஷோவை அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்க போவது என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வேறு ஒரு நட்சத்திரம் தொகுத்து வழங்க வந்தால் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் அப்படி நடப்பது முதல் முறையாகும்.

எங்கு சென்றாலும் என் கடமைகளை நான் கண்டிப்பாக செய்ய வந்துவிடுவேன் என கமல் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வாரம் கொரோனா தொற்று அவரை பிக் பாஸில் பங்கேற்பதில் இருந்து தடுத்திருக்கிறது.

அவர் வீடியோ கான்பரன்ஸில் பங்கேற்கிறாரா, அல்லது வேறு புது தொகுப்பாளர் வருவாரா என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் இந்த வார தொகுப்பாளர் பற்றி பல்வேறு வதந்திகளும் இணையத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. விஜய் சேதுபதி இங்கும் வந்துட போறாரு என நக்கலாக மீம்களும் உலா வருகின்றன.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்கள்படி இந்த வாரம் சுருதி ஹாசன் தொகுப்பாளராக வர வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த செய்தி