ஆப்நகரம்

Tamil Bigg Boss 4 Promo: கமல் ஹாசன் இஸ் பேக்..என்ன நடக்க போகிறது? புதிய ப்ரோமோ

இன்று சனிக்கிழமை கமல்ஹாசன் பிக் பாஸ் 4 ஷோவிற்கு திரும்பி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 3:44 pm
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட துவக்க விழாவுடன் ஆரம்பித்தது. மொத்தம் 16 போட்டியாளர்கள் நான்காவது சீசன் வீட்டுக்குள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இடையே முதல் நாளிலிருந்து பரபரப்பான வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்து வருகிறது. அதை நாம் ஒரு வாரமாக பார்த்து வருகிறோம்.
Samayam Tamil Bigg Boss 4 Tamil Kamal haasan Promo


இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் ஹாசன் மீண்டும் பிக் பாஸ் ஷோவிற்கு வந்திருக்கிறார். அவர் மேடைக்கு வரும் வீடியோ தற்போது புதிய ப்ரோமோ வீடியோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

பின்னணியில் யார் என்று தெரிகிறதா என்ற விஸ்வரூபம் பட பாடல் கமல் ஹாசன் நடந்து வரும் போது போடப்படுகிறது. பிக் பாஸ் மேடைக்கு வந்து 'வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 4' என அவரது வழக்கமான பாணியில் கூறுகிறார்.

இது முதல் வாரம் தான் என்றாலும் வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதால் கமல்ஹாசன் அவற்றுக்கெல்லாம் என்ன சொல்லப் போகிறார் என்பது பற்றி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


இந்த வாரம் அதிக அளவு பிரச்சனைகள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடைபெற்றது. ஆனால் அதில் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் இடையேயான பிரச்சனை தான் ஹைலைட். அது பற்றி தான் கமல்ஹாசன் அதிகம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் கமல் அது பற்றி விவரித்து இருக்கிறார். ‘உப்பு போட்டு சாப்பிடுறவன் உள்ள இருக்க மாட்டான் என சொல்லிவிட்டு உள்ளேயே இருக்கிறார் ஒருவர், தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவர் ஆகிவிட்டு இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருகிறார் மற்றொருவர். நாம் எப்படி? வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க போகிறோமா?” என கமல் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி