ஆப்நகரம்

Mahath: மகத்தை வெளியேற்றிய கமலுக்கு கோடான கோடி நன்றிகள்- நெட்டிசன்கள் பாராட்டு

இன்று ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதியாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பு மக்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 27 Aug 2018, 8:07 am
இன்று ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதியாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பு மக்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil maxresdefault
பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேற்றம்- கமலுக்கு குவியும் பாராட்டு


கடந்த ஜூன் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளனர். வாரந்தோறும் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் ஞாயிறு அன்று மட்டும் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் போட்டியாளர்கள், பார்வையாளர்கள் பலரால் விமர்சிக்கப்பட்டு வரும் நடிகர் மஹத் இன்றைய நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் வட்டாரங்களிலிருந்து உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் நிகழ்ச்சி அரங்கிலிருந்த கமல்ஹாசன், நடிகர் மஹத்தை ரெட் கார்ட் காட்டி வெளியேற்றியுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் சமூகவலைதளங்களில் கமல்ஹாசனை பாராட்டி மக்கள் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில், பிக்பாஸ் 2 வீட்டில் மகத் மற்றும் யாஷிகாவின் காதல் பார்த்து பார்வையாளர்கள் விமர்சித்து வந்தனர். இதனால் மகத்தின் காதலியான பிராச்சி அவரை விட்டு பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இதனால் நிகழ்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், பார்வையாளர்களின் கருத்திற்கு இணங்க கமல் மற்றும் பிக்பாஸ் இணைந்து மகத்தை வெளியேற்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்த செய்தி