ஆப்நகரம்

பிரியங்கா தான் அர்ச்சனா 2.0.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

‘நீ விஜய் டிவி ப்ராடக்ட் என்றால் என்ன வேனும்னாலும் செய்வியா’ என பிரியங்காவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

Samayam Tamil 21 Oct 2021, 1:16 am
பிரியங்காவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் தான் இந்த சீசன் அர்ச்சனா என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்
Samayam Tamil netizens troll bigg boss 5 contestant priyanka for her behavior and groupism
பிரியங்கா தான் அர்ச்சனா 2.0.. வெச்சி செய்யும் நெட்டிசன்கள்


பிக் பாஸ் 5

பிக் பாஸ் ஐந்தாவது தொடங்கி தற்போது மூன்றாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த முறை ஷோ மிகவும் மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்துவருகிறது. அதற்கு காரணம் ஒரு சில போட்டியாளர்கள் கேம் விளையாடுகிறேன் என்கிற பெயரில் செய்யும் குளறுபடிகள் தான்.

குறிப்பாக அபிஷேக் ராஜா மற்றும் அவர் உடன் கூட்டணி சேர்ந்து பிரியங்காவும் ஒரு கேங் சேர்த்து வைத்துக்கொண்டு கேம் பிளான் என சொல்லி ஷோவின் சுவாரஸ்யத்தை குறைத்து வருகிறார்கள் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது.

அபிஷேக், பிரியங்கா செய்யும் அட்ராசிட்டி

நான் பிரியங்கா உடன் இருந்தால் தான் என்னை டிவியில் காட்டுவாங்க, இப்படி செய்தால் நான் ப்ரோமோவில் வருவேன், அவருடன் சண்டை போட்டால் என்னை பற்றி பரபரப்பாக பேசுவாங்க என அபிஷேக் மற்றும் பிரியங்கா இருவரும் யோசித்து செய்யும் விஷயங்கள் எல்லாம் வெளியில் ரசிகர்களுக்கு சலிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் அவர்கள் அவர்களாகவே இருந்தால் போதும், இப்படி பிளான் செய்து ட்ராமா செய்துகொண்டிருந்தால் எப்படி எனநெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

பிரியங்கா தான் அர்ச்சனா 2.0

கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் 4ம் சீசனில் அர்ச்சனா வீட்டுக்குள் ஒரு கேங் சேர்த்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக பல விஷயங்களை செய்து வந்தார். அது போலவே இந்த சீசனில் பிரியங்கா ஆரம்பித்து இருக்கிறார்.

அதனால் பிரியங்கா தான் அர்ச்சனா 2.0 என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அவரை பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். சில ட்விட்கள் இதோ..

பிரியங்காவும் அர்ச்சனாவும் ஒன்னு

பிரியங்காவை யாராவது காப்பாத்துங்க

இது தான் ரியாலிட்டி ஷோவா..

அக்‌ஷரா ஜெயிக்க கூடாது.. பிரியங்காவுக்கு அது மட்டும் தான் முக்கியம்!

அடுத்த செய்தி