ஆப்நகரம்

நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா.. 7 போட்டியாளர்களில் இந்த வார எலிமினேஷன் யார்?

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் முதல் முறையாக அர்ச்சனா சிக்கி இருக்கிறார். மேலும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என பாருங்கள்.

Samayam Tamil 14 Dec 2020, 11:30 pm
பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக நாமினேஷன் கன்பெக்ஷன் ரூமில் ரகசியமாக தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று வித்யாசமாக அனைவர் முன்னிலையில் ஓபன் நாமினேஷனாக நடைபெற்றது.
Samayam Tamil Bigg Boss 4 Tamil Nomination list (Pic Credits: Hotstar)


அர்ச்சனா கேங்கில் இருந்து 2 பேர் கடந்த வாரம் வெளியேறிவிட்டதால் அவர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் அவர்கள் சேர்ந்து ஆரி மற்றும் அனிதாவை டார்கெட் செய்தனர்.

நாமினேட் செய்வதற்காக ஒவ்வொரு போட்டியாளரும் சொன்ன காரணங்களும் சில நேரங்களில் வாக்குவாதத்தை கிளப்பிவிட்டது. பாலாஜி பேசிய போது ரியோ ஆக்ரோஷமாக பேச முற்பட்டார், ஆனால் அர்ச்சனா அவரை கண்ட்ரோல் செய்துவிட்டார்.

மேலும் ஆஜித் அர்ச்சனாவை நாமினேட் செய்யும் போது சொன்ன காரணம் யாருக்கும் புரியவில்லை. 'இது எனக்கே புரியவில்லை, விளக்கமாக சொல்லுங்கள்' என பிக் பாஸே கூறினார். அதனால் அனைவரும் சிரித்துவிட்டனர்.

இறுதியில் அறிவிக்கப்பட்ட நாமினேஷன் லிஸ்ட்டில் மொத்தம் 7 பேர் இருந்தனர். அதன் விவரம் மற்றும்அவர்களுக்கு எதிராக பதிவான வாக்குகள் விவரம்..

ஆஜித் - 2
சோம் - 2
ஷிவானி - 4
அனிதா - 3
அர்ச்சனா - 3
ரியோ - 3
ஆரி - 2

இதில் இருந்து யார் வெளியே போவார்கள் என்பதை இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி