ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டில் என்னை அதிகம் காயப்படுத்தியவர் ஷாரிக் தான்: உண்மையை உடைத்த ஐஸ்வர்யா

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிலேயே தன்னை அதிகம் காயப்படுத்தியவர் ஷாரிக்தான் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 5:44 am
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிலேயே தன்னை அதிகம் காயப்படுத்தியவர் ஷாரிக்தான் என்று கூறியுள்ளார்.
Samayam Tamil பிக்பாஸ் வீட்டில் என்னை அதிகம் காயப்படுத்தியவர் ஷாரிக் தான்: உண்மையை உடைத்த ஐஸ்வர்யா
பிக்பாஸ் வீட்டில் என்னை அதிகம் காயப்படுத்தியவர் ஷாரிக் தான்: உண்மையை உடைத்த ஐஸ்வர்யா


தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் சீசனைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், பிக்பாஸின் சமீபத்திய எபிசோட்டில், எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்ட ஐஸ்வர்யா, பொன்னம்பலம், ஜனனி, தாடி பாலாஜி, ரம்யா உள்ளிட்டோருக்கு ‘நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் டேனி, நாமினேட் செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் நேர்காணல் செய்தார். மேலும், மற்ற போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டவர்களிடம் கேள்விகள் எழுப்பினர்.

அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவிடம் இந்த வீட்டில் உங்களை அதிகம் காயப்படுத்தியவர் யார் என்ற கேள்விக்கு, அது நிச்சயமாக ஷாரிக்காத்தான் இருக்க முடியும் என பதிலளித்துள்ளார். தொடர்ந்து கூறுகையில், முதல் இரண்டு வாரங்களில் அவர் நன்றாக பழகியதாகவும், அதன்பின் அவரது நடவடிக்கை மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த சீசனில், ஓவியா மற்றும் ஆரவ் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதைப் போல இந்த சீசனில் ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

அடுத்த செய்தி