ஆப்நகரம்

ஆரி இவ்ளோ மோசமானவரா? ஷிவானி - ரம்யா வைத்த குற்றச்சாட்டு! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஆரி பற்றி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர். இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அது காட்டப்பட்டு உள்ளது.

Samayam Tamil 28 Dec 2020, 1:29 pm
பிக் பாஸ் 4 வீட்டில் இந்த வார தலைவராக தேர்வாகி இருக்கிறார் ஆரி. அதனால் அவரை நாமினேட் செய்ய முடியாது என்கிற ஆதங்கத்தில் மற்றவர்கள் இருக்கின்றனர். அதை பாலாஜி இன்று நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்ற போதே ஓப்பனாக கூறிவிட்டார். அது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
Samayam Tamil Aari and Ramya


இந்நிலையில் சற்றுமுன் வெளிவந்திருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் ரம்யா மற்றும் ஷிவானி இருவரும் அடுக்கடுக்கான புகார்களையே வைத்திருக்கின்றனர்.

"ஆரி எல்லாமே கரெக்ட்டாக பண்ணனும் என நினைத்து செய்கிறார். அது ஆடியன்ஸுக்கு பிடிக்கிறதா இல்லையா என்கிற டவுட் எப்போதும் எனக்கு இருக்கிறது. நேத்து வந்த போன் கால் பற்றியும் எனக்கு அப்படி தான் தெரிகிறது. பிடித்தது என எந்த விதத்திலும் தோணல," என ரம்யா கூறுகிறார்.

"குரூப்பிஸம் இருக்கிறது என சில விஷயங்களை கரெக்டாக சொல்கிறார், ஆனால் அவருக்கென்று வரும் போது சுயநலமாக மற்றவர்களை குறை சொல்லிவிடுகிறார் "என ஷிவானி குற்றம்சாட்டுகிறார்.

கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவரது ப்ளஸ் மற்றும் மற்றவர்கள் மைனஸ் என அனைத்தையும் சொல்லிவிடுகிறார் என ரம்யா குற்றம்சாட்ட, 'தன்னை காப்பாற்றிகொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் மற்றவர்களை தப்பாக காட்டிவிடுகிறார்' என ஷிவானி தெரிவித்து உள்ளார்.


இந்த ப்ரொமோவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். ரம்யாவுக்கு ஆரியை தவிர பேசுவதற்கு எதுவுமே இல்லை எனவும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.



அடுத்த செய்தி