ஆப்நகரம்

மெழுகு டாலு நீ.. ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டில் ஆடிய கலக்கல் நடனம்! வீடியோ பாருங்க

பிக் பாஸ் வீட்டில் ஷிவானி செல்லம்மா பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். வீடியோ இதோ.

Samayam Tamil 15 Oct 2020, 7:04 pm
நடிகை ஷிவானி நாராயணன் எவ்வளவு பிரபலம் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் நடன வீடியோக்களுக்கு லட்சக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சில மணி நேரங்களிலேயே அவரது நடன வீடியோக்கள் பல லட்சம் ரசிகர்களால் பார்க்கப்படும். அந்த அளவுக்கு அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க தினமும் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
Samayam Tamil Shivani Narayanan Dance in Bigg Boss 4


கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக ஷிவானி நாராயணன் சென்று இருக்கிறார் என்பதால் சமூக வலைத்தளங்களில் அவர் தற்போது அதிகம் புகைப்படங்களை வெளியிடுவதில்லை. அதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தாலும், பிக் பாஸ் ஷோவில் ஷிவானியின் நடனத்தை பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என இருக்கிறார்கள். தினமும் காலை போட்டியாளர்கள் நடனம் ஆடும் வீடியோ போடப் படுவது வழக்கம், அதில் ஷிவானியின் நடனமும் நிச்சயம் இடம் பெறும்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ஜோடியாக நடனமாடும் டாஸ்க் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் இன்று ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் உடன் சேர்ந்து நடனமாடியிருக்கிறார்.

டாக்டர் படத்தில் வரும் செல்லம்மா பாடலுக்கு தான் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் நடனமாடி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


பிக்பாஸ் நான்கில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ஷிவானி நாராயணன் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்காக அதிக அளவு வாக்குகள் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி