ஆப்நகரம்

காதலா? பாசமா? வெற்றிக்காக சொல்லிக்கொடுக்கும் கமல் ஹாசன்!

இன்றைய பிக் பாஸ் 3 புரோமோ வீடியோவில் வெற்றியை நோக்கி போட்டியாளர்கள் நகர வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு நினைவு படுத்த வேண்டும் என்று கமல் ஹாசன் தனக்கே உரிய பாணியில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2019, 5:24 pm
கடந்த இரு சீசன்களில் நடக்காதது கூட இந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். அதற்கு முன்னுதாரணம் மதுமிதா தனது கையை அறுத்துக்கொண்டது.
Samayam Tamil Losliya Bigg Boss Tamil 3


அதையும் மீறி மதுமிதா தனக்கு வழங்க வேண்டிய மீதி சம்பளத் தொகையை திருப்பி தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு மதுமிதாவும் விளக்கம் கொடுத்துள்ளார். இப்படியிருக்கும் போது, கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதில் இருந்து தொடர்ந்து காதல் வலையில் சிக்கி வந்தார். தற்போது லோஸ்லியாவை காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.


இதற்கு முன்னதாக, ஆரம்பத்தில் அபிராமி அதன் பிறகு சாக்‌ஷி என்று சுற்றி வந்த கவின் தற்போது லோஸ்லியாவிடம் தஞ்சம் புகுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. உண்மையில், பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் பாசம் காட்டுவது சேரன் மற்றும் சாண்டி மட்டுமே. இதில், அப்பா மகள் உறவு முறையில் பழகி வருவது சேரனும் லோஸ்லியாவும் தான்.

இதையும் படிங்க: Episode 61 Highlights: சாண்டி, சேரனை எரிச்சலூட்டிய கவின்- லோஸ்லியா ஜோடி!

மேலும் படிக்க: வனிதா இருந்தும் கவின், லோஸ்லியாவை பிரதானப்படுத்தும் பிக் பாஸ்..!

Also Read This: லட்டு சாப்பிடும் போட்டியில் தர்ஷனுக்கு டஃப் பையிட் கொடுக்கும் சாண்டி..!

தற்போது பிக் பாஸ் 3 வீட்டில் யாரும் வெற்றியை நோக்கி செல்லவில்லை. காதல் மற்றும் பாசத்திற்கு இடையில் சிக்கி தவிக்கும் நிலையில், இன்றைய 62ஆவது நாள் புரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கொந்தளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: உள்ளேயிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்படை இருக்கிறது.


ஆனால், அந்தப் படைக்கு தலைமை ஏற்கும் உரிமையை அவர்கள் இழந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. ஒரு பக்கம் காதல் வழுக்கிறது, மற்றொரு பக்கம் பாசம் வழுக்கிறது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுபடுத்தும் வாரம் இந்த வாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று மற்றொரு புரோமோவில், நேற்றைய நிகழ்ச்சிக்கான விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, லக்‌ஷூரி பட்ஜெட் ஏன் குறைந்தது என்று தெரியுமா? இது ஒரு விதி மீறல். இந்த விதி மீறல் விளையாட்டில் வெற்றிபெற முடியாது என்பதை இருவருக்குமே ஞாபகப்படுத்தும் ஒரு குறும்படம். ஆனால், இது ஒரு விளக்கப்படம் மட்டுமே தான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி