ஆப்நகரம்

Kavin: லோஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்: எத்தனை முடிச்சு போட்டாரோ?

இன்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு கிராமங்களாக மாறுவதற்கு கொடுக்கப்பட்ட ஆடைகளை அணியும் போது லோஸ்லியா கழுத்தில் கருப்பு நிற கயிறை கவின் கட்டியுள்ளார்.

Samayam Tamil 28 Aug 2019, 12:12 am
அப்பாடா….இன்றைக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தமிழக கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாகவும், தமிழக கலைகளை ஞாபகப்படுத்தும் விதமாகவும் நடந்தது. ஆமாம், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், போட்டியாளர்கள் இரு கிராமங்களாக பிரிந்தனர்.
Samayam Tamil Tamil Bigg Boss 3 Kavin Losliya


இதில், சாண்டி, முகென், லோஸ்லியா, வனிதா ஆகியோர் ஒரு குடும்பமாகவும், கவின், சேரன், தர்ஷன், ஷெரின் ஆகியோர் ஒரு குடும்பமாகவும் பிரிந்தனர். அதன் பிறகு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உடைகளை அணிந்த பிறகு லோஸ்லியா தனக்குரிய காஸ்ட்யூமிற்காக கழுத்தில் கருப்பு நிற கயிறு அணிய வேண்டும் என்று கவினிடம் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Episode 64 Highlights: பொம்மலாட்டம், நிலா சோறு என்று அமர்க்களப்படுத்திய கிராமத்தினர்!




இதையடுத்து கவின், லோஸ்லியா கழுத்தில் கருப்பு நிற கயிறை கட்டியுள்ளார். ஆனால், எத்தனை முடிச்சு போட்டார் என்பது தெரியவில்லை. அதோடு, வெறும் கயிறு மட்டும்தானா? வேறு எதுவும் மணி இருக்கிறதா என்று லோஸ்லியாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மறந்த கலைகளை கற்றுக்கொள்ளும் போட்டியாளர்கள்!

இதையடுத்து மறந்து போன தமிழக கலைகளை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக போட்டியாளர்களுக்கு நாட்டுப்புற கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதற்காக 5000 கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய காளீஸ்வரன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவர், பொம்மலாட்டம் குறித்து முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.



அதன் பிறகு போட்டியாளர்களுக்கு டமுக்கு டக்கா டமுக்கு டக்கா…..டக்கா டக்கா டக்கா என்று பொம்மலாட்டம் குறித்து சிம்பலுடன் கற்றுக் கொடுத்தார். இதனை ஒவ்வொரு நாளும் தினமும் மாலை நேரத்தில் கிராமத்தினர் அரங்கேற்ற வேண்டும்.

இதையடுத்து சேரன் கிராமத்தினர் மது ஒழிப்போம் பற்றியும், வனிதா கிராமத்தினர் கூட்டுக் குடும்பம் பற்றியும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதில், வனிதா, முகென், லோஸ்லியா, சாண்டி ஆகியோர் கச்சிதமாக நிகழ்ச்சியை அரங்கேற்றி வெற்றி பெற்றனர்.

Also Read This: எவ்வளவு பணம் கொடுத்தால் இந்த அனுபவம் கிடைக்காது; ஜெயிக்க ஆசையில்லை: ஷெரின்!

அதன் பிறகு 2 கிராமத்தினருக்கும் உணவு வழங்கப்பட்டது. அதில், கிராமத்தினர் நிலா சோறு சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சாண்டி வழக்கமாக தனது பாட்டை விருந்தாக்கினார். அவர், ஒரு கூட்டு கிளியாக என்ற பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.






அடுத்த செய்தி