ஆப்நகரம்

ஒன்றல்ல இரண்டு எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது இவர்தானா?

பிக் பாஸ் 5ல் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்க போகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

Samayam Tamil 10 Dec 2021, 8:27 pm
பிக் பாஸ் 5ல் இதற்கு முன்பு பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். வெளியே சென்றிருக்கும் ஒரே ஒரு ஆண் போட்டியாளர் அபிஷேக் ராஜா மட்டும் தான். அவர் அதன் பிறகு மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வீட்க்குள் வந்து அதன் பிறகு இரண்டாவது முறையாக வெளியேறி இருக்கிறார்.
Samayam Tamil Bigg Boss 5


இதனை தொடர்ந்து இந்த வாரம் அபினை, அமீர், தாமரை, சிபி, இமான் அண்ணாச்சி, நிரூப் மற்றும் அக்ஷரா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது எலிமினேஷன் பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் ஒன்றல்ல இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆக போகிறார்கள் என தகவல் வந்திருக்கிறது.

அந்த இரண்டு பேர் யார் என்பது தான் தற்போது ரசிகர்கள் அதிகம் விவாதித்து கொண்டிருக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. கடந்த பல வாரங்களாக நாமினேஷனில் தொடர்ந்து வந்துகொண்டு கடைசி ஆளாக காப்பாற்றப்பட்டு வரும் அபினை தான்இந்த வாரம் வெளியேற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நிரூப் கடந்த சில வாரங்களாக சரியாக விளையாடவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் அவர் வெளியேறவும் வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் இமான் அண்ணாச்சியும் டேஞ்சர் ஸோனில் தான் இருக்கிறார் என தெரிகிறது. அதனால் இவர்களில் வெளியே போகப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த செய்தி