ஆப்நகரம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 வீட்டிற்குள் நுழைந்த நடிகர் யோகி பாபு காதலி!

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் காதலி என்று சொல்லப்பட்ட நபர், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

Samayam Tamil 23 Jun 2019, 3:06 pm
மிகப் பிரபலமான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இன்று தொடங்குகிறது. இதற்கான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். இன்றைக்கு ஒளிபரப்பாகும் எபிஸோடில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.
Samayam Tamil Yogi Babu


கடந்த இரண்டு முறையும் பட்டிதொட்டி எங்கும் பரவிய பிக்பாஸ், இப்போது மூன்றாவது சீசனுக்குள் நுழைந்திருக்கிறது. சூர்யா, நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார். முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில், இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் 3ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் கசிந்துள்ளது.

பாத்திமா பாபு,

பவர் ஸ்டார் சீனிவாசன்,

சேரன்,

ஷெரீன்,

சரவணன்,

மதுமிதா,

மோகன் வைத்தியா,

சாந்தினி,

சாண்டி,

சாக்‌ஷி அகர்வால்,

அபிராமா,

மலேஷியன் மாடல்,

இலங்கை மாடல்

இப்போது இந்த லிஸ்ட்டில் யோகி பாபுவின் காதலி என கூறப்பட்டு வந்த நடிகை ரேஷ்மா கலந்து கொள்கிறார் என உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்தவர் தான் ரேஷ்மா. இவருக்கும் நடிகர் யோகி பாபுவிற்கும் காதல் எனும் செய்தி பரவியது. இதனை ரேஷ்மா மறுத்திருந்தார்.

ஆனால் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். இதனால் இவருக்கும் யோகிபாபுவிற்கும் காதல் தான் எனும் செய்தி மேலும் வேகமாக பரவியது. இந்நிலையில் நடிகை ரேஷ்மா பிக்பாஸ் 3ல் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. 17 போட்டியாளரகளில் ஒருவராக அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அடுத்த செய்தி