ஆப்நகரம்

47 years of Rajinism: 'என்றுமே ராஜா நீ... ரஜினி' ரஜினிகாந்துக்கு சன் டிவி வாழ்த்து!

47 years of Rajinism: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 47 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவருக்கு சன் டிவி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Aug 2022, 5:19 pm
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 47 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவருக்கு சன் டிவி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 47 years of rajinism sun tv congratulates rajinikanth
47 years of Rajinism: 'என்றுமே ராஜா நீ... ரஜினி' ரஜினிகாந்துக்கு சன் டிவி வாழ்த்து!



அபூர்வ ராகங்கள்

பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து வில்லனாக சில படங்களில் நடித்த ரஜினிகாந்த், ஹீரோவாக ஜொளிக்கத் தொடங்கினார். சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த், ஏராளமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ளார்.

Varisu: அடக் கொடுமையே... மீண்டும் லீக்கான வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. அதிர்ச்சியில் படக்குழு!

வசூல் மன்னன்

இதனால் வசூல் மன்னன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். 71 வயதான ரஜினிகாந்த் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்திய சினிமாவின் அடையாளமாக திகழும் ரஜினிகாந்த், ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

விருதுகள்

சினிமாத்துறையில் ரஜினிகாந்த் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்துள்ளது. அதோடு பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார் ரஜினிகாந்த். தமிழக அரசின் கலைமாமணி விருது, என்டிஆர் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Meena: மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மீனா... தீயாய் பரவும் தகவல்!

47 ஆண்டுகள்

தொடர்ந்து சினிமாவில் ஆக்டிவாக உள்ள ரஜினிகாந்த், சினிமாத்துறையில் தடம் பதித்து 47 ஆண்டுகள் ஆகிறது இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியும் நடிகர் ரஜினிகாந்த்தின் 47 ஆண்டு கால சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

என்றுமே ராஜா நீ ரஜினி

இதுதொடர்பான சன்டிவியின் டிவிட்டர் பதிவில், என்றுமே ராஜா நீ ரஜினி... சினிமாத்துறையில் 47 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிதி ஷங்கர் பத்தின இந்த ரகசியம் தெரியுமோ?

அடுத்த செய்தி