ஆப்நகரம்

Marimuthu: ஆமா..நான் தான் நம்பர் கொடுத்தேன்..பரபரப்பை கிளப்பிய மாரிமுத்து..!

எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலமான மாரிமுத்து சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஒரு பெண் அரைகுறை ஆடையில் தன் புகைப்படத்தை பதிவிட்டு can i call you என ட்வீட் போட்டிருந்தார். இதற்கு மாரிமுத்து எஸ் என கூறி தன் நம்பரை பதிவிட, இந்த டீவீட்டை என் தந்தை போடவில்லை என மாரிமுத்துவின் மகன் அகிலன் தெரிவிக்க இல்லை நான் தான் அந்த டீவீட்டை போட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மாரிமுத்து

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 3 Mar 2023, 11:34 am

ஹைலைட்ஸ்:

  • நான் தான் நம்பர் கொடுத்தேன்
  • ஒப்புக்கொண்ட மாரிமுத்து
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாரிமுத்து
தற்போது தமிழ்நாட்டில் எதிர்நீச்சல் குணசேகரன் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குணசேகரனின் ஒவ்வொரு வசனங்களும், உடல் மொழியும் மீம் மெட்டீரியலாக மாறி வருகின்றது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து ரசிகர்களின் மனதில் பதிய செய்துள்ளார் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து.

இவ்வாறு பிரபலமாக இருந்து வரும் மாரிமுத்து சில நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கினார். சமூகத்தளத்தில் அரைகுறை ஆடையில் ஒரு பெண் தன் புகைப்படத்தை பதிவிட்டு can i call you என ஒரு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். இதற்கு மாரிமுத்து yes என கூறி தன் நம்பரையும் பதிவிட்டிருந்தார்.

Leo: இதெல்லாம் நல்லதுக்கு இல்ல லோகி..கொஞ்சம் குறைச்சிக்கோங்க..அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்..!

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிலர் இது மாரிமுத்துவாக இருக்காது என்று கூறி வந்தனர். ஆனால் அதில் குறிப்பிட்டிருக்கும் நம்பர் மாரிமுத்துவுடன் தான் என்பது தெரியவந்தவுடன் இது சர்ச்சையாக மாறியது.

சர்ச்சையில் மாரிமுத்து


பலரும் மாரிமுத்துவை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து மாரிமுத்துவின் மகன் அகிலன், இது என்னுடைய அப்பாவின் நம்பர் தான். அவரின் நம்பர் பலரிடம் உள்ளது. ஆனால் இந்த டீவீட்டை என் அப்பா பதிவிடவில்லை.யாரோ அவர் நம்பரை தவறாக பயன்படுத்துகின்றார்கள் எனக்கூறினார்.


இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என நினைத்தால் தற்போது மாரிமுத்து அந்த டீவீட்டை போட்டது நான் தான் என கூறியுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த மாரிமுத்து, அந்த பதிவை போட்டது நான் தான்.

நான் தான் ட்வீட் செய்தேன்


என் நம்பரை போட்டவுடன் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் போன் செய்கின்றார்கள்.இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. என் பையன் எங்கே எனக்கு கேட்ட பெயர் வந்துவிடுமோ என நினைத்து தான் நான் போடவில்லை என கூறியுள்ளார். ஆனால் நான் தான் அந்த டீவீட்டை போட்டேன் என்றார் மாரிமுத்து.




மேலும் தன்னை பூமர், பிற்போக்குவாதி என அழைக்கும் சில ரசிகர்களையும் சற்று கட்டமாகவே பேசியுள்ளார் மாரிமுத்து. இந்நிலையில் இவரின் இந்த பேட்டி தான் தற்போது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த பேட்டியை பார்க்கும்போதே மாரிமுத்து கோபத்தின் உச்சியில் இருக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது. ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் தன் திரை வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சிரித்த முகத்துடன் பேசிய மாரிமுத்து தற்போது இந்த சர்ச்சைக்கு பிறகு கடுகடுவென பேட்டி கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது. இருந்தாலும் உண்மையை ஒப்புக்கொண்ட மாரிமுத்துவை ஒருபக்கம் ரசிகர்கள் பாராட்டினாலும், மறுபக்கம் அவரை சிலர் நவீன பூமர் என்றே அழைத்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி