ஆப்நகரம்

சினேகனுடன் 7 வருடம் முன்பு எடுத்த முதல் போட்டோ: திருமணத்திற்கு பின் வெளியிட்ட கன்னிகா ரவி

சினேகனை முதல் முறை பார்த்த போது எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டு உள்ளார் கன்னிகா ரவி.

Samayam Tamil 1 Aug 2021, 1:09 am
பிக் பாஸ் புகழ் கவிஞர் சினேகனை நடிகை கன்னிகா ரவி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் தான் திருமணம் செய்து வைத்தார். அதன் புகைப்படங்கள் அதிகம் வைரலானது.
Samayam Tamil after marriage kannika ravi releases first photo with snehan taken 7 years ago
சினேகனுடன் 7 வருடம் முன்பு எடுத்த முதல் போட்டோ: திருமணத்திற்கு பின் வெளியிட்ட கன்னிகா ரவி



பிக் பாஸ் சினேகன்

பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையோடு சினிமா துறையில் இருந்து வரும் சினேகன் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் மூலமாக மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் கமல்ஹாசன் உடனும் நெருக்கம் ஆனார்.

அதற்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த அவர் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு பிறகு முக்கிய புள்ளிகள் பலரும் அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில் சினேகன் தொடர்ந்து கமலுடன் பயணித்து வருகிறார்.

சினேகன் - கன்னிகா ரவி திருமணம்

சினேகன் பிரபல நடிகை கன்னிகா ரவியை சமீபத்தில் தான் கரம்பிடித்தார். அவர்கள் திருமணத்தை கமல்ஹாசன் தான் நடத்தி வைத்தார். அவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

சென்னை வடபழனியில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. அதில் கமல் மட்டுமின்றி பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டு இருந்தனர்.

7 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ

சினேகன் மற்றும் கன்னிகா காதல் விவகாரம் இதுவரை வெளியில் வராமல் ரகசியமாகவே இருவரும் வைத்து வந்திருக்கின்றனர். திருமணத்தை சினேகன் அதிகாரபூர்வமாக அறிவித்த போது அனைவரும் சர்ப்ரைஸ் ஆனார்கள்.

இந்நிலையில் கன்னிகா ரவி வருடங்களுக்கு முன்பு சினேகன் உடன் எடுத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

"என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது🚶‍♀️🚶‍♂️

முதல் புகைப்படம்📷 2014🗓

வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க💐 கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்🍫

அன்புடன் , கன்னிகா சினேகன்"

இவ்வாறு கன்னிகா குறிப்பிட்டு இருக்கிறார்.

போட்டோ

மனைவி பற்றி சினேகனின் பதிவு

அடுத்த செய்தி