ஆப்நகரம்

DD விவகாரத்து ஆன நாள் என் மனதில்... உருகிய டிடி!

தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, முதல் முறையாக தனது விவகாரத்து பற்றி பேசியுள்ளார்.

Samayam Tamil 7 Mar 2020, 3:08 pm
தனியார் தொலைக்காட்சியின் முக்கியத் தொகுப்பாளராக இருந்தாலும், ஹீரோயின்களுக்கு நிகராக கொண்டாடப்பட்டு வருபவர் டிடி. அவருக்கு அவ்வளவு ஃபேன்ஸ் இருக்கிறார்கள். பெரிய பெரிய நிகழ்ச்சி என்றவுடன் முதல் அழைப்பு டிடிக்குதான் எனும் அளவுக்கு பிஸியாக இருந்தவர் டிடி. அவர் வந்தாலே அந்த மேடை கலகலப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள். தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் நடுவராக சில நிகழ்ச்சிகளில் இருந்துள்ளார்.
Samayam Tamil dd


டிடிக்கு 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரோடு திருமணமானது. சில வருடங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே அதைக் காரணமாக கொண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் அவரது விவாகரத்து குறித்து டிடி முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

வாழ்க்கையில் காதல் என்பது இருவரிடமும் இருக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக அது உடையவும் செய்யலாம். அப்படி உடைப்பு ஏற்படும்போது, நம்மை சிலர் ஆதரிப்பார்கள். சிலர் கீழே தள்ளிவிடுவார்கள். நாமதான் அதையெல்லாத்தையும் தாண்டி முன்னேறி வரணும். விவாகரத்து ஆன தினத்தில் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததெல்லாம் ஒன்றுதான். எப்படியாவது கோர்ட்டுக்கு போகவேண்டும் என்பதுதான் அது. அதன் பிறகு பேசவில்லை. சந்திக்கவில்லை. இருந்தாலும் வாழ்க்கை கடந்து போய்ட்டே இருக்கு. கடவுளுக்கு நன்றி இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி