ஆப்நகரம்

கொலை வழக்கில் இருந்து தப்பிக்க பிளான் போடும் அனு… அர்ஜுன் போட்டுள்ள திட்டம் என்ன?

பையா கணேஷ் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க அனு பிளான் போடுகிறார். அர்ஜுன் என்ன திட்டம் போடுகிறார்.

Samayam Tamil 30 Dec 2020, 9:53 pm
ரோஜா சீரியலில் இன்று ஆரம்பிக்கும் போதே ரோஜா – அர்ஜுன் ரொமேன்ஸ் காட்சி தான். தூங்கிக்கொண்டிருக்கும் அர்ஜுனை பார்த்துக் கொண்டே சீரியலின் ஆரம்ப காட்சி முதல் இப்போது வரை அர்ஜுன் உடனான பழக்கத்தை நினைத்துப் பார்க்கிறார்.
Samayam Tamil ரோஜா சீரியல்
ரோஜா சீரியல்


அப்போது திடீரென அர்ஜுன் கண் விழிக்க அவர் மீது அப்படி சாய்கிறார் ரோஜா. தனது வாழ்க்கையை கலர்புல்லாக மாற்றியதாக அர்ஜுனை புகழ்கிறார் ரோஜா. அர்ஜுனும் உடனே ரோஜாவை புகழ்கிறார். இப்படி மாற்றி மாற்றி புகழ்ந்து கொள்கிறார்கள். அடுத்ததாக அனுவை சந்திக்கும் சாக்ஷி பையா கணேஷ் கொலை வழக்கு குறித்து பேசிக்கொள்கிறார்கள். அர்ஜுன் விடாப்பிடியாத இந்த வழக்கில் தங்களுக்கு தண்டனை பெற்றுத்தர துடிப்பதாக வருத்தப்படுகின்றனர்.

அப்போது அர்ஜுன் அசிஸ்டெண்ட் நவீன் பற்றி சொல்கிறார் அனு. உடனே அவரை காசு கொடுத்து வாங்க திட்டமிடுகின்றனர். அதற்கேற்றார் போல நவீனுக்கு போன் செய்து அவரிடம் காசு கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசுகிறார்கள். நவீனும் காசு கொடுத்தால் அனுவுக்கு எதிரான ஆதாரங்களை தருவதாக சொல்லிவிடுகிறார். ஆனால் இது அர்ஜுன் போட்ட பிளானா என்பது தெரியவில்லை.

என்னம்மா மீனா இப்படி பண்ணிட்டீங்க? ஆனந்தக் கண்ணீரில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

இங்கு இப்படி என்றால் செண்பகம் தன்னை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்தவரை சந்தித்து நடந்த விஷயங்களை கூறுகிறார். அவரிடம் தனது குடும்பத்தைப் பற்றி தெரிந்தவர்கள் தன்னை கடத்தியதாக சொல்கிறார். இருவரும் பல விஷயங்களை பேசிக்கொள்கின்றனர். செண்பகம் 25 வயதில் நடந்த ஒரு விபத்தை அடுத்து இவரின் அரவணைப்பில் தான் இருக்கிறார். அவர் தான் செண்பகத்தை படிக்க வைத்து ஆளாக்கி இருக்கிறார்.

ரோஜா – அர்ஜுன் அனாதை ஆசிரமத்திற்கு சென்று பாலுவின் பெற்றோரை சந்திக்கின்றனர். பாலுவின் அப்பாவுக்கு 70-வது பிறந்தநாள் வருவதால் அதை கொண்டாட திட்டமிடுகின்றனர். ஆனால் வேண்டாம் என்று பாலுவின் அப்பா சொல்லிவிடுகிறார். அர்ஜுன் விடுவதாய் இல்லை. வலுக்கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார். குழந்தைகளுடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது.

அடுத்த செய்தி