ஆப்நகரம்

Roja serial: வீட்டுக்கு திரும்பிய அனுவை வெச்சி செய்யும் அர்ஜுன், ரோஜா!

தலைமறைவாக இருந்த அனு தற்போது வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு விஷ ஊசி போட்டு வெச்சி செய்கிறார் அர்ஜுன்.

Samayam Tamil 23 Nov 2021, 1:03 am
அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் சேர்ந்து வில்லி அனுவை மிரட்டி பல விஷயங்கள் செய்ய வைக்கின்றனர். அவர் அதனால் அழுதேவிட்டார்.
Samayam Tamil arjun injects anu with a drug as she returns home roja serial today review
Roja serial: வீட்டுக்கு திரும்பிய அனுவை வெச்சி செய்யும் அர்ஜுன், ரோஜா!



கவலையில் பூஜா

ரோஜாவை பாட்டி ஏற்றுக்கொள்ளவே இவ்ளோ நாள் ஆகிவிட்டது. ஆனால் என்னை ஏற்றுக்கொள்வார். அது நாடாகும் என எனக்கு தோன்றவில்லை என சொல்லி பூஜா எமோஷ்னல் ஆக பேசுகிறார். அவருக்கு அஸ்வின் ஆறுதல் கூறுகிறார்.

உன்னை ஏற்கனவே அம்மா ஏற்றுக்கொண்டுவிட்டார், அப்பா நிச்சயம் ஏற்றுக்கொள்வார். மேலும் ஆதரவாக அர்ஜுன் ரோஜா இருக்கிறார்கள், அது போதும் என அஸ்வின் கூறுகிறார். ஆனால் நான் உங்கள் வீடு வேலைக்காரரின் மகள் என சொல்லி பாட்டி ஏற்றுக்கொள்ள மாட்டாரே என பூஜா மேலும் வருத்தமாக பேசுகிறார்.

திரும்பி வரும் அனு

அனு திரும்பி வருவதாக யசோதா மற்றும் பாலு இருவரும் வந்து பாட்டியிடம் சொல்கின்றனர். ஆனால் அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் வேறு ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கின்றனர். அர்ஜுன் அரிவாள் தீட்ட, ரோஜா அடுப்பில் இரும்பு கம்பியை சூடு படுத்திக்கொண்டிருக்கிறார். அனு வந்தால் விடமாட்டோம் என அவர்கள் கூறுகின்றனர்.

அனு மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு வீட்டுக்குள் தயக்கத்துடன் வருகிறார். கையில் இருக்கும் பிரசாதத்தை பாட்டியிடம் கொடுத்து தான் பல கோவில்களுக்கு சென்று செண்பகம் அம்மாவிற்கு குணமடைய வேண்டும் என பிராத்தித்து வந்ததாக சொல்கிறார்.

வெச்சி செய்யும் அர்ஜுன்

அப்போது அங்கு வரும் அர்ஜுன் ஒரு ஊசியை எடுத்து ரோஜாவுக்கு போட்டுவிடுகிறார். இன்னும் அரை மணி நேரத்தில் நீ செத்து விடுவாய் எனவும் சொல்கிறார். அதை தடுக்க மாற்று மருந்து இருக்கிறது. அதை தரவேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும் என அர்ஜுன் சொல்கிறார்.

அனுவும் தலையாட்ட அவர் தலையில் பானை வைத்து கரகாட்டம் ஆட சொல்கின்றனர். ஆனால் அவர் பானையை உடைத்துவிடுகிறார். அதனால் தனக்கு மருந்து கிடைக்காது என சொல்லி அழ தொடங்குகிறார் அனு.

பானை உடைத்ததற்கு பரிகாரமாக ராஜாவிடம் சவுக்கடி வாங்க வேண்டும் என அர்ஜுன் சொல்கிறார். உயிர் பயத்தில் அதற்கும் அனு ஒப்புக்கொள்கிறார். இப்படி அர்ஜுன் அனுவை வெச்சி செய்ய எபிசோடே நிறைவு பெற்றுவிட்டது. நாளைக்கும் இது தொடரும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி