ஆப்நகரம்

ராதிகா மகளை வீட்டுக்கு அழைத்து சென்ற பாக்யா! கோபியின் கள்ளக்காதல் குடும்பத்திற்கு தெரிய வருமா?

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியில் காரில் ராதிகா வீட்டுக்கு சென்று இறங்குகிறார் பாக்யா. அதன் பின் ராதிகாவின் மகள் மயூவை தன்னுடன் அழைத்து செல்கிறார்.

Samayam Tamil 2 May 2021, 3:01 am
நேற்றய எபிசோடில் ராதிகாவின் வீட்டுக்கோ போகப்போவதாகும், உங்கள் காரில் வருகிறேன் என பாக்யா சொன்னதும் கடும் அதிர்ச்சி அடைகிறார் கோபி.
Samayam Tamil baakiya takes radhikas daughter mayu with her will gopi get caught
ராதிகா மகளை வீட்டுக்கு அழைத்து சென்ற பாக்யா! கோபியின் கள்ளக்காதல் குடும்பத்திற்கு தெரிய வருமா?


பாக்யாவை இறக்கிவிட்டு வேகமாக கிளம்பும் கோபி

வீட்டில் அனைவரும் வற்புறுத்தியதால் பாக்யாவை அழைத்து செல்வதாக ஒப்புக்கொள்கிறார். அதன் பின் கோபி பாக்யாவை ரோட்டிலேயே விட்டுவிட்டு போவதாக சொல்கிறார். பாக்யா தான் கட்டாயப்படுத்தி காரியில் ராதிகா வீடு முன்பு வரை கூட்டி செல்கிறார்.

பாக்யாவை வேகமாக இறங்கச்சொல்லி சொல்லி திட்டுகிறார் கோபி. அதன் பின் அவரையும் உள்ளே வருமப்டி அழைக்கிறார் பாக்யா. பதறிப்போன கோபி முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

இனியாவிடம் பேசும் principal

பள்ளியில் Charity டே என்பதால் அதற்காக பாக்யா குலாப்ஜாமுன் செய்து கொடுத்தனுப்புகிறார். அதை பள்ளியில் வைத்து ஒரு கப் 10 ருபாய் என விற்கிறார் இனியா. அவருக்கு தான் அதிக அளவு பணம் வசூல் ஆகிறது.

பள்ளி முதல்வர் வந்து இனியாவிடம் பேசுகிறார். குலாப்ஜாமூன் நன்றாக இருக்கிறது என சொல்லி கேட்க, அம்மா என சொல்கிறார் இனியா. எங்க அம்மா ஒரு பிசினஸ் வுமன் என இனியா சொல்ல, நல்ல அம்மாவும் கூட என சொல்கிறார் தலைமை ஆசிரியர்.

உனக்காக அவர் என்னிடம் அதிகம் வருத்தப்பட்டார். உன் அம்மாவுக்காகவாவது நீ நன்றாக படிக்க வேண்டும் என சொல்லிவிட்டு போகிறார் அவர்.

ராதிகா மகளை அழைத்து வரும் பாக்யா

ராதிகா வீட்டிற்கு சென்று அவரிடம் பணம் 3000 ரூபாயை கொடுக்கிறார் பாக்யா. மொத்த பணத்தையும் ஒன்றாக கொடுக்க முடியாது, மாதாமாதம் கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார் அவர்.

அதன் பின் ராதிகாவின் மகள் மயூ உடன் பரமபதம் விளையாடுகிறார் பாக்யா. ராதிகா மிகவும் சோகமாக இருப்பது பற்றி பாக்யா கேட்க, அவரது கணவர் ராஜேஷ் டைவர்ஸ் கொடுக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது பற்றி சொல்கிறார்.

நீங்க எங்க வீட்டுக்கு வந்துவிடுங்கள் என பாக்யா அழைக்கிறார், ஆனால் ராதிகா தயக்கத்துடன் மறுக்கிறார். சரி மகளையாவது 2 நாட்களுக்கு அனுப்பி வையுங்கள், மகிழ்ச்சியாக இருக்கட்டும் என கேட்க, ராதிகா சற்று நேரம் யோசித்துவிட்டு ஒப்புக்கொள்கிறார்.

அதன் பின் மயூவை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார் பாக்யா. இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி