ஆப்நகரம்

ஒரு பொண்ணு கேட்கக்கூடாத வார்த்தைகளை கேட்டிருக்கிறேன்: விருது விழாவில் பாரதி கண்ணம்மா வெண்பா உருக்கம்

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவாக நடித்து வரும் ஃபரினா விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Samayam Tamil 18 Apr 2021, 5:17 pm

ஹைலைட்ஸ்:

  • வில்லியாக நடிப்பது தான் கஷ்டம்.
  • பச்சை பச்சையாக திட்டுவாங்க. ஒரு பெண் கேட்கக்கூடாத வார்த்தைகளை கூட கேட்டிருக்கிறேன்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Barathi Kannamaa villi Venba (Pic Credits: Hotstar)
விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் இன்று ஒளிபரப்பானது. அதில் பல்வேறு categoryயில் விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த வில்லிக்கான விருது பாரதி கண்ணம்மாவில் வெண்பாவாக நடித்து வரும் ஃபரினாவுக்கு வழங்கப்பட்டது.
அவர் மேடைக்கு வந்ததும் கையில் ஒரு பொம்மை துப்பாக்கியை கொடுத்து வெண்பா போல நடித்து கண்ணம்மாவை சுட வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது வெண்பா போல வில்லத்தனத்துடன் பேசினார், ஆனால் அவர் கண்ணம்மாவுக்கு பதில் பாரதியை சுட்டுவிட்டார்.

அதன் பின் அவரது வாழக்கையில் பாட்ட கஷ்டம் பற்றி பேசினார். "7 வருடம் போராட்டம். எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது பிரவீன் (டைரக்டர்) சார். ஒரு பொண்ணு கேட்கக்கூடாத வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன். பச்சை பச்சையாக திட்டுவாங்க.

சொல்லப்போனால் சீரியல் ஹீரோயினை விட வில்லியாக நடிப்பது தான் கஷ்டம். ஆனால் ஒரு கடை திறப்பு விழாவுக்கு கூட கூப்பிடுவதில்லை. ஹீரோயினை தான் கூப்பிடுகிறார்கள்" என சொல்லி வருத்தப்பட்டார்

அடுத்த செய்தி