ஆப்நகரம்

யாருமே எதிர்பார்க்காத காரியத்தை செய்த சௌந்தர்யா: ஆடிப்போன வெண்பா.!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 19 Aug 2022, 10:05 am
நிச்சயாதார்த்த பத்திரிக்கையை வாசிக்கும் போது அதனை நிறுத்த சொல்லும் வெண்பா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்கிறாள். என்ன காரணம் என கேட்கும் போது, யாருமே இல்லாத அனாதை மாதிரி இருக்க இவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு பெரிய குடும்பத்துல கல்யாணம் பண்ணி போகணும்னு ஆசை என பாரதியை பார்த்து கூறுகிறாள்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


உடனே சௌந்தர்யா அப்போ உனக்கு ரோஹித் தனியா நிற்குறது மட்டும் தான் பிரச்சனை. வேற எதுவும் இல்லைல என கேட்க, வெண்பா ஆமா என கூறுகிறாள். உடனே சௌந்தர்யா வேணுவை அழைத்து கொண்டு மேடைக்கு செல்கிறாள். இங்க நிற்குற ரோஹித்தை எங்களோட மூனாவது பையனா தத்து எடுத்துக்கிறோம். கல்யாணம் முடிச்சுட்டு ரோஹித் வெண்பாவை கூட்டிட்டு எப்போ வேணாலும் வீட்டுக்கு வரலாம் என கூறுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் சௌந்தர்யா வெண்பாவை கட்டிப்பிடித்து ஒழுங்கா மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இந்த நிச்சயம் நடக்க விடு. இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும். ஜெயிலுக்கு போறீயா? இல்லை அமைதியா நிச்சயம் நடக்க விடுறியா என கேட்கிறாள். சாந்தியும் இப்போ அமைதியா இருங்கம்மா. கல்யாணத்துல பார்த்துக்கலாம் என்கிறாள்.

அதன்பின்னர் நிச்சயம் நடந்து முடிகிறது. ரோஹித் சௌந்தர்யாவிடம் கண் கலங்கி கொண்டே நன்றி சொல்கிறான். ஷர்மிளாவும் நீங்க பண்ண இந்த உதவியை என்னைக்குமே மறக்க மாட்டேன் என கூறுகிறாள். அதனை தொடர்ந்து ரோஹித் பாரதி கண்ணம்மா அனைவரையும் அழைத்து போட்டோ எடுக்கிறான்.

வீட்டை விட்டு வந்த கையோடு காதலியை சந்தித்த கோபி: கதறி அழும் பாக்யா.!

இந்த எதிர்பார்க்காத ட்விஸ்ட்டை நினைத்து வெண்பா ரூமில் புலம்பி கொண்டிருக்க கண்ணம்மா பாட்டு பாடி கொண்டே அங்கு வருகிறாள். வெண்பாவை கன்னாபின்னாவென்று கலாய்க்க அவள் மேலும் கடுப்பாகிறாள். ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வாழுற வழியை பாரு. அடுத்தவ புருஷனை எப்படி மயக்கலாம்ன்னு பார்க்காத என சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி