ஆப்நகரம்

Bharathi Kannamma: கண்ணம்மாவை நிரந்தரமாய் பிரிய போகும் ஹேமா: வெண்பாவின் சதித்திட்டம்..!

பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெட்ட சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 26 Nov 2022, 10:32 am
ஹேமாவை தேடி அலையும் கண்ணம்மா, சௌந்தர்யாவை சாப்பிட சொல்கிறான் அகில். குழந்தை தேடுறதுக்காது உங்க உடம்புல தெம்பு வேணாமா? என சொல்லி சாப்பாடு கொடுக்கிறாள். ஆனால் அவர்கள் குழந்தையை கண்டுபிடிக்காமல் சதையும் சாப்பிட மாட்டோம் என அடம் பிடிக்கின்றனர். இந்தப்பக்கம் ஹேமாவை விற்பதற்காக ஆட்களை கூட்டி வருகின்றனர் ரெளடிகள்.
Samayam Tamil பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா


அவர்கள் வந்ததும் பத்து இலட்சம் தருவதாக கூறுகின்றனர். ஆனால் ரெளடிகலள் இருபது லட்சம் கொடுத்தா தான். இல்லன்னா நாங்க வேற ஆளை பார்த்துக்கிறோம் என கூறுகின்றனர். அதன்பின்னர் அவர்கள் சொல்ல விலைக்கே ஓகே சொல்கின்றனர். ஆனால் இப்போது பத்து இலட்சம் தான் இருக்கு. மீதி பணத்தை எங்களோட வந்து பார்டர்ல வாங்கி கொள்ளுமாறு கூறுகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் ஹேமாவை டிரக் ஒன்றில் ஏற்றிக்கொண்டு கிளம்புகின்றனர். அகிலன் ஒருப்பக்கம் அவளை தேடிக்கொண்டிருக்க, அப்போது சரியாக அதே ரோட்டில் வரும் டிரக் இடையில் வருகிறான். இதனால் வண்டியை நிப்பாட்டி டிரைவர் திட்டி கொண்டிருக்கிறான். அப்போது கண்ணம்மா, சௌந்தர்யா, அஞ்சலி பதட்டத்துடன் அங்கு வருகின்றனர்.

Baakiyalakshmi Serial: கோபியை கண்டமேனிக்கு திட்டி தீர்த்த ராதிகா: இராமமூர்த்தி சொன்ன விஷயம்.!

அவர்களை பார்த்ததும் டிரைவரை உடனே வண்டியை கிளப்ப சொல்கிறான். இதனிடையில் வீட்டில் வெண்பா, இவனுங்க குழந்தையை ஏத்திவிட்டானுங்களா இல்லையான்னு தெரியலை. ஒரு போன் கூட பண்ணலை என யோசித்து கொண்டே ரெளடிக்கு போன் பண்ணுகிறாள். அவனிடம் என்னாச்சு என விசாரிக்க, குழந்தையை மாத்திவிட பார்டர் போறோம். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அக்கா. நாங்க பார்த்துக்கிறோம் என கூறுகின்றனர்.

Baakiyalakshmi Serial: இனியாவால் கோபி, ராதிகா இடையே வெடித்த மோதல்: தாத்தா நினைச்சது நடக்குது.!

அவர்களை குழந்தை ஏற்றிவிட்ட உடனே போன் பண்ணுமாறு சொல்லுகிறாள். இந்தப்பக்கம் கண்ணம்மா அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கதறி அழுகிறாள். இன்னைக்கு ஹேமாவை விட்டுட்டா, இனிமே பார்க்கவே முடியாதுன்னு தோணுது கூறுகிறாள். அதன்பின்னர் கோயில் ஒன்று முன்பாக போய் அழுது புலம்புகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி