ஆப்நகரம்

நடிகர் வெங்கடேஷ் மரணம்: சின்னத்திரை நட்சத்திரங்கள் உருக்கமான இரங்கல்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 23 Mar 2021, 3:01 pm
சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்றசேரியல்களில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்த வெங்கடேஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் பற்றிய செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
Samayam Tamil Serial Actor Venkatesh funeral today


சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வெங்கடேஷ் மரணத்திற்கும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். அவர் அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகியது, பேசியது பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் இன்ஸ்டாகிராமில் வெங்கட் பற்றி பதிவிட்டு உள்ளார். 'இது உண்மையில் அதிர்ச்சியான விஷயம். RIP பா' என அவர் கூறி உள்ளார்.


மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் ரோஷ்னியும் மிகவும் சோகமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.


மேலும் வெங்கடேஷின் இறுதி அஞ்சலி இன்று நடைபெறுவது பற்றி போஸ்ட்டரையும் வெளியிட்டு உள்ளனர். செந்நெ வடபழனியில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சென்னை ஏவிஎம் இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி